Connect with us
Cinemapettai

Cinemapettai

myskkin-arunvijay-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மிஸ்கின் அருண் விஜய் படம் இந்த மாதிரி கதையா? வேற லெவல் படமா இருக்கும் போல!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் மிஷ்கின். குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படம் எடுத்து வெற்றி காண்பதில் வல்லவர்.

சமீபத்தில் கூட இவரது இயக்கத்தில் வெளிவந்து செம ஹிட் அடித்தது சைக்கோ படம். இதனை தொடர்ந்து இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு ஏதும் இல்லாத நிலையில் கிட்டத்தட்ட 11 கதைகளுக்கு மேல் ரெடி பண்ணி வைத்துவிட்டாராம் மிஸ்கின்.

அதில் ஒன்றுதான் தனது முந்தைய ஹிட் படமான அஞ்சாதே 2 படம் எனவும், அஞ்சாதே நரேன் தற்போது மார்க்கெட்டில்லாத நடிகராக இருப்பதால் அந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

மிஸ்கின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் உருவாக இருப்பது உண்மைதான். ஆனால் அது அஞ்சாதே2 இல்லை என விகடன் யூடியூப் சேனலுக்கு தெளிவாக விடையளித்தார் மிஸ்கின்.

ஆனால் அதுவும் ஒரு போலீஸ் படம் தான் என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இதுவரை இல்லாத அளவுக்கு சேசிங், இன்வெஸ்டிகேஷன் என மிரட்ட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அருண் விஜய்க்கும் போலிஸ் கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகு இருப்பதால் படம் மிரட்டலாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். சைக்கோ படத்தை விட இரண்டு மடங்கு எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

Continue Reading
To Top