பல இயக்குனர்கள் நடிகர் அவதாரம் எடுத்து  வரும் நிலையில் இயக்குனர் சுசீந்திரனும் நடிகர் அவதாரம் எடுக்கவிருக்கிறார்.

இயக்குனர் சுசீந்திரன், இயக்குனர் மிஷ்கின், விக்ராந்த் ஆகிய மூவர் மையக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது.

நேற்று காலை முதலே இப்பட நிறுவனம் இப்படத்தை பற்றிய அறிவிப்பை படிப்படியாக தங்கள் ட்விட்டரில் அறிவித்தனர்.

இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் மற்றும் இயக்குனர் யார் என்று மாலை 6 . 30 மணிக்கு அறிவிப்பதாக கூறினர். பின்னர் படத்தின் டைட்டில் மூன்று வார்த்தை என்றும் அதனை கண்டுபிடிக்க சிறு க்ளுவும் கொடுத்தனர் படிப்படியாக.

இறுதியாக மாலை இவர்கள் படத்தின் டைட்டில், முதல் லுக், மற்றும் இயக்குனர் பற்றி தெரிவித்தனர்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கும் இப்படத்திற்கு “சுட்டு பிடிக்க உத்தரவு”  என்று பெயர் வைத்துள்ளனர்.

விரைவில் படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் வரும் .