சவரக்கத்தி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது இதில் சவரகத்தி படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, இயக்குநர் ராம் , நடிகையாக பூர்ணா நடித்துள்ளார், இயக்குநர் மிஷ்கின் , கீதா ஆனந்த், இசையமைப்பாளர் அரோல் குரோலி , ஒளிப்பதிவாளர் கார்த்திக் , கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் , ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

இயக்குனர் மிஷ்கின் பேசுகையில் முதலில் என் தம்பி இயக்குனர்  ஆதித்யாவிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்றார்,ஏன் என்றால் அனைத்து போஸ்டர்களிலும் என் பெயரை இயக்குனர் ஆதித்யாவின் பெயரை விட பெரிதாக போட்டுள்ளார்கள் அது ஏன் தவறு இல்லை படத்தை வாங்கியவர் தான் அப்படி செய்துள்ளார்கள்.காரணம் என்னுடைய பெயர் பெரிதாக இருந்தால் படத்திற்கு வியாபாரம் நன்றாக போகும் என்பதால் அப்படி செய்துள்ளார்கள் என நினைக்கிறன்.

savarakaththi

மேலும் அவர் கூறியதாவது எப்பொழுதும் என் படத்தின் விளம்பரங்களில் எனது பெயரை பெரிதாக போடுவது எனக்கு பிடிக்காத ஓன்று, நான் சென்றாலும் 50 வருடம் கழித்து இது என்னுடைய படம் என்று பேசினால் அது போதும் எனக்கு. சவரகத்தி படத்தின் மூலம் எனக்கு எந்த லாபமும் இல்லை அதேபோல் எந்த லாபமும் வேண்டாம் எனக்கு.

savarakaththi

அதை நான் எதிர்பார்க்கவும் மாட்டேன் என் மனதுக்கு பிடித்த இசையமைப்பாளர் அரோல் குரோலி என்னுடைய மனதுக்கு நெருக்கமான இசையமைப்பாளர். சவரகத்தி படத்தில் அம்மாவின் பாசத்தை மையபடுத்தி ஒரு இசை போட்டுள்ளார் அது என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அவர் மிகசிறந்த இசையமைப்பாளர்.

savarakaththi

இயக்குனர் ராம் சவரகத்தி படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார்,தனது காலில் அடிபட்டும் தொடர்ந்து படபிடிப்பில் கலந்துகொண்டு சிறப்பாக நடிப்பை வெளிபடுத்தினார். அவரின் படம் பேரன்பு படம் அருமையாக வந்துள்ளது அந்த படத்திற்காக பல விருதுகளை வாங்குவார் என நம்புகிறேன்.

savarakaththi

நடிகையை பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும் இவர் ஒரு மலையாள நடிகை இவர் முதன் முதலில் தனது சொந்த குரலில் சுத்த தமிழ் டப்பிங் பேசியுள்ளார் நடிகை பூர்ணா இந்த படத்தின் வெற்றியை 90% நடிகை பூர்ணாவுக்கு சமர்பிக்கிறேன் மீதி 10% வெற்றியை இயக்குனர் ராமுக்கு சமர்பிக்கிறேன்.

savarakaththi

எம்.ஜி.ஆர் , சிவாஜி , ரஜினி , கமல் போன்ற நடிகர்கள் இல்லாவிட்டால் நாம் எப்படி உயிரோடு இருந்திருப்போம் என்று எனக்கு தெரியவில்லை.அவர்கள் தான் இத்தனை வருடங்களாக நம்மை சந்தோஷத்தில் வைத்தவர்கள் அவர்கள் படத்தை நான் திரையரங்கில் தான் பார்ப்பேன் என்றார் திரையரங்கில் படம் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்றார் மிஷ்கின்.