fbpx
Connect with us

3 ஆண்டுக்கு பிறகு என் சம்பளம் ரூ. 10 கோடியாகியிருக்கும் -கறார் காடும் ஜி.வி.பிரகாஷ்

gv.prakash-salary

3 ஆண்டுக்கு பிறகு என் சம்பளம் ரூ. 10 கோடியாகியிருக்கும் -கறார் காடும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இதுவரை 50 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். வளர்ந்து வரும் சமயத்தில் ‘டார்லிங்’ படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். தற்போது கோடம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். பகலில் நடிப்பு, இரவில் இசையமைப்பு என பிசியாக செயல்பட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ். வெள்ளிக்கிழமை அவர் நடித்த ‘புருஸ்லீ’ படம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவு இல்லை. என்றாலும், புதிய படங்களுக்கான டைரக்டர்களின் படையெடுப்பு குறைந்தபாடில்லை.

அதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களுக்கு நேரம் ஒதுக்கி கதையை கேட்கும் ஜி.வி.பிரகாஷ், எப்போது கால்சீட் என்று கேட்டால், இப்போது என் கைவசம் பாலா, வெற்றிமாறன், ராஜீவ்மேனன் ஆகியோர் படங்கள் மட்டுமின்றி, மேலும் 4 புதுமுக டைரக்டர்கள் படங்களும் உள்ளன. இந்த படங்களை முடிக்க கண்டிப்பாக இன்னும் 3 ஆண்டுகளாகிவிடும். அதன் பிறகுதான் என்னால் கால்சீட் கொடுக்க முடியும். முடிந்தால் அது வரைக்கும் காத்திருங்கள். மேலும், நீங்கள் 3 ஆண்டுகள் கழித்து என்னிடம் வரும்போது, என்னுடைய சம்பளம் ரூ. 10 கோடியாகியிருக்கும். அதுக்கும் நீங்கள் தயாராக இருந்தால் வெயிட் பண்ணுங்கள் என்கிறாராம் ஜி.வி. பிரகாஷ்.

இந்த மகா நடிகருக்கு இவ்வளவு பேர் வெய்டிங்கா? நம்பர மாதிரி இல்லையேன்னு உங்களுக்கு தோணும்..அதுக்கு நாங்க பொறுப்பில்ல..

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top