Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனது பாஸிடிவ் எனர்ஜி எப்பவுமே சல்மான் கான்தான்.. நெகிழும் முன்னணி நடிகை

எனது பாஸிடிவ் எனர்ஜி எப்பவுமே சல்மான் கான்தான்:
நடிகர் சல்மான் கான்தான் எப்பவுமே எனக்கு பாஸிடிவ் எனர்ஜி என முன்னணி நடிகை ஒருவர் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.
ரேஸ் பட வரிசையில் மூன்றாவது படத்தில் சல்மான் கான், பாபி தியோல், அனில் கபூர், டெய்சி தியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ரேஸ் 3, படத்தில் நாயகியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். ரேஸ் படத்தின் முதல் இரண்டு பாகங்களில் சயீப் அலிகான் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், மூன்றாவது பாகத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை மற்றொரு நிறுவனத்துடன் சேர்ந்து சல்மான் கானே தயாரித்திருக்கிறார். படத்தின் டிரெய்லர் மற்றும் 2 பாடல்கள் ஆகியவை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்தநிலையில், ரேஸ் பட நாயகி ஜாக்குலின், சல்மான் கானைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இலங்கையில் இருந்து வந்து பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாகி இருக்கிறார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். கிக் படத்துக்குப் பிறகு சல்மான் கான் ஜோடியாக அவர் ரேஸ் – 3 படத்தில் நடித்திருக்கிறார். சல்மான் கான் குறித்து பேசிய ஜாக்குலின், “இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகி கொஞ்ச காலம் ஆகிவிட்டது. நான் இந்தியாவுக்கு முதன்முதலாக வந்த நாளில் இருந்து எனக்கு பக்கபலமாக சல்மான் இருந்து வருகிறார். படங்களில் ஒப்பந்தம் ஆக வேண்டுமா வேண்டாமா என சிந்தித்துக் கொண்டிருந்த காலம் முதலே அவர் எனக்கு நண்பராக இருக்கிறார். அவரது கிக் படத்தில் நடித்தது எனது கெரியரில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்தது.
என்னைப் பொறுத்தவரை சல்மான் கான் எனது குடும்பத்தில் ஒருவர். அவருக்கு நான் மிகப்பெரிய மரியாதை கொடுக்கிறேன். அவருக்காக நான் எதுவும் செய்வேன். இதேபோன்ற உணர்வு அவரிடத்திலும் இருக்கிறது. அவர் எனக்கு ஆதரவளிப்பவராக எப்போதுமே இருந்து வருகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பதை நான் வரவேற்கிறேன். அவர் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய பாஸிடிவ் எனர்ஜியைக் கொடுப்பவராக இருக்கிறார்’’ என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். ரெமோ டிசோசா இயக்கியுள்ள இந்த படம் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
