அஜித், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு தற்போது ‘சென்னை 600028’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் அஜித் அல்லது விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சமூக வலைதளங்களில் மெர்சல் படத்தை நேரடி ஒளிபரப்பு செய்யும் விஷமிகள்..!!! விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘மங்காத்தா’ படத்தின் 2ஆம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாகவும், அந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியா? அல்லது புதிய கதையா? என்பதை அஜித் முடிவு செய்வார் என்றும் வெங்கட்பிரபு தனது பேட்டியில் கூறியுள்ளார்.

அதேபோல் இளையதளபதி விஜய்யை வைத்து ஒரு கேஷுவலான, ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் மேற்கண்ட இரண்டு ஆசையும் விரைவில் நிறைவேறும் என்றும் அவர் தனது பேட்டியில் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிம்புவுடன் இணைந்து ‘பில்லா 2’ படத்தை இயக்கவுள்ள ஐடியாவும் அவரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது