தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால் இவர் முதலில் தமிழில் சிந்து சமவெளி படத்தில் தான் அறிமுகமானார், ஆனால் இவர் நடித்த மைனா திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது மைனா படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பின்பு நடித்த படங்கள் அவரை ஒரு நட்சத்திர நடிகையாக உயர்த்தியது இவர் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வந்தார் அதன் பின் இயக்குனர் விஜய்யுடன் காதலில் விழுந்தார் அதன் பின்பு திருமணமும் செய்துகொண்டார் ஆனால் திருமண வாழ்க்கை கசந்துவிட்டதால் ஒரே வருடத்தில் விவாகரத்தும்பெற்றார்.

இப்பொழுது அனைத்தையும் விட்டுவிட்டு சினிமாவில் நடிப்பதை மட்டும் செய்துவருகிறார், இவர் சமீபத்தில் பிலிம்பேர் விழாவில் கலந்துகொண்டார் அதில் மாதவனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது விருதை கொடுத்த அமலாபால் பேசினார் அப்பொழுது பேசும் பொழுது “எல்லாருக்கும் முதல் காதல் வந்திருக்கும் அப்படி நான் முதலில் காதலித்தது வேறு யாரையும் இல்லை மாதவனைதான்” என மேடையிலேயே அறிவித்து மேடையை அதிரவைத்தார்.