Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் படம் தேசிய விருது கண்டிப்பாக வாங்கும்: பிக்பாஸ் ஜூலி
பிக்பாஸ் ஜூலி தன் அடுத்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்து இருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு புது ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பப்பட்டது பிக்பாஸ். இதில், பலருக்கு பாராட்டுகள் கிடைத்தாலும், வசைகளை வாங்கிய சிலரும் இருக்கத்தான் செய்தார்கள். இதில், பொது வெளியில் இருந்து வந்த ஜூலிக்கு பொதுமக்களிடம் கெட்ட பெயர் தான் அதிகமாக கிடைத்தது.
இருந்தும், பிக்பாஸுக்கு பிறகு பல வாய்ப்புக்கள் அவரை தேடித்தான் வந்தது. தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தற்போது உத்தமி, அனிதா எம்பிபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். பிஸி வாழ்க்கையில் இருக்கும் ஜூலி சமீபகாலமாக மீடியாவில் இருந்து சற்று ஒதுங்கியே தான் இருக்கிறார்.
இந்நிலையில், தன் சமீபத்திய பேட்டியில், தான் சிம்ரன் போல ஆக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பிக்பாஸ், சினிமா வாழ்க்கை குறித்த பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து இருக்கிறார். அதில், பேசிய ஜூலி, பிக்பாஸ் என்பது வித்தியாசமான கேம் ஷோ தான். வீட்டுக்குள் இருந்த சில பிரபலங்களே வெளியில் வேறு மாதிரி மாறி இருந்தனர். அதுவே எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கு நான் மட்டுமே பொது வெளியில் இருந்து வந்திருந்தேன். மற்ற அனைவரும் நடிகர்கள்.
அவர்களை சமாளிக்கவே அப்படி நடந்து கொண்டேன். எனக்கு யாரும் போட்டி எல்லாம் இல்லை. ஆனால், நடிகை சிம்ரன் போல ஆக வேண்டும். நடிப்பில் மனோரமா ஆச்சி போல் நடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
தொடர்ந்து, அனிதா எம்பிபிஎஸ் படத்தால் எனக்கு எதிர்ப்பு அதிகரித்தது. இருந்தும், என்னை அறியாதவர்கள் அதை சொல்வதால் நான் கவலை கொள்ளவில்லை. இது காசுக்காக செய்யப்படும் படம் இல்லை. தேசிய விருது வாங்கும் என்ற நம்பிக்கையிலே உருவாக்கி வருகிறோம். ஒரு படம் நடித்தால் அந்த கதாபாத்திரம் என்னை விட வேறு யாரும் செய்ய முடியாது என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டும். அதுமட்டுமே, என் சினிமா வாழ்வின் குறிக்கோளாக நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
