My-Dear-Kuttichathan
My-Dear-Kuttichathan

பழம்பெரும் எடிட்டர் சேகர் மரணமடைந்துள்ளார் இவருக்கு 81 வயது ஆகும் மாரடைப்பு காரணமாக மருத்துவமையில் அனுமதிக்கபட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி காலை 6 மணியளவில் உயிர்பிரிந்தார். இவரின் மரணம் தென்னிந்திய சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

sekar
sekar

மரணமடைந்த எடிட்டர் சேகருக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள் இவர்கள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது இவரின் மனைவி பெயர் சுந்தரி சேகர், மரணமடைந்த சேகரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற இருக்கிறது.

அதிகம் படித்தவை:  தனுஷின் ஹாலிவுட் படத்தின் தமிழ் டைட்டில் இதுதான்!

எடிட்டர் சேகர் பாசில், சித்திக் போற்ற முன்னணி இயக்குனருக்கு ஆஸ்தான இயக்குனராக பணியாற்றியவர் அதேபோல் தென்னிந்திய சினிமாவில் முதல் சினிமாஸ்கோப் படம் தச்சொலி அம்பு,முதல் 70 mm படமான படையோட்டம், மேலும் இந்தியாவில் முதல் 3டி படமான மை டியர் குட்டிச்சாத்தான் ஆகிய படத்தை எடிட் செய்தவர் இவர்தான்.

My-Dear-Kuttichathan
My-Dear-Kuttichathan

வருஷம் 16 படத்திற்காக தமிழக அரசு விருதை பெற்றார் ஒரு கால கட்டத்தில் திரையுலகில் பணிபுரிந்தது போதும் என தனது சொந்த ஊரான திருச்சி பக்கத்தில் உள்ள தென்னூரில் செட்டில் ஆனார், எந்த சாதனை செய்தாலும் அதை பற்றி தான் பேசுவதை விட தான் செய்த வேலை தான் பேசவேண்டும் என்ற குறிகோளுடன் இருப்பவர் ஆனால் இவரை பற்றி விக்கிபிடியாவிலும் கூட தைகள் இல்லாதது அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது.

அதிகம் படித்தவை:  விக்ரம் வேதா ரீமேக்! 2 டாப் நடிகர்கள் இணைகிறார்கள்.. யார் தெரியுமா?