மெர்சல் இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன் மற்றும் பலர் நடிக்கும் காதல், நகைச்சுவை, அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் மேலும்  எஸ். ஜே. சூர்யா, சமந்தா, வடிவேலு,நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். பாக்ஸ்ஆபிஸில் 205 கோடி வசூல் செய்த படம்இப்படத்தினை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க, படத்தின் திரைக்கதையை பாகுபலி புகழ் விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.

mersal

இது விஜய் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம். மற்றும், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100 -ஆவது திரைப்படம் ஆகும்.

விஜய்யின் ‘மெர்சல்’ இப்போது தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் படம். தமிழைத் தாண்டி வெளியான எல்லா இடங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.

mersal

கர்நாடகாவில் ஹாரிஸன் ஸ்டூடியோஸ் தான் மெர்சல் படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருந்தது. மெர்சல் படத்தின் கன்னட விநியோகஸ்தர் டோனி ‘மெர்சல்’ பட கலெக்ஷன் குறித்து பேசியிருக்கிறார்.

கர்நாடகாவில் மெர்சல் தான் இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம். ‘மெர்சல்’ படத்தின் கர்நாடக தியேட்டர் உரிமை 6 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தது.

mersal

2 வார முடிவில் ரூ. 12.25 கோடி வசூலித்திருக்கிறது என்று கூறியுள்ளார் டோனி. ரஜினியின் கபாலி படம் கர்நாடகாவில் ரூ. 15.5 கோடி வரை வசூலித்து முதல் இடத்தில் இருக்கிறது.

விரைவில் கபாலி பட சாதனையை விஜய்யின் மெர்சல் படம் முறியடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் கர்நாடகாவில் வெளியான விஜய்யின் தெறி படம் ரூ. 7 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகளின் புண்ணியத்தில் விஜய் கர்நாடகாவிலும் வசூல் கோட்டை கட்டியிருக்கிறார்.