சினிமாவில் முன்னணி நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்து விடவேண்டும் என்ற ஆசை ஹீரோயின்களுக்கு மட்டுமல்ல, பல கலைஞர்களுக்கும் இருக்கும். தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கும் இந்த ஆசை வந்துள்ளது.

திருப்பதி சாமி குடும்பம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கு காரணம் கவண் படம் என்கிறார் அவர். இப்படத்தில் சின்ன ரோல் என்றாலும் விஜய் சேதுபதியின் குழுவோடு இருந்ததால் எனக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் நடித்த போது நிறைய என கற்றுக்கொடுத்தார்.

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரிக்கும் படம் ‘திருப்பதி சாமி குடும்பம்’.

இந்த படத்தில் ஜே.கே, ஜாகீன் ஆகிய இருவர் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் அறிமுகமாகிறார். இவர்களுடன் தேவதர்ஷினி, சிசர்மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஓய்.எம்.முரளி, இசை – சாம் டி.ராஜ், எடிட்டிங் – ராஜா முகம்மது, கலை – ஆரோக்கிய ராஜ், நடனம் – தினேஷ், அமீப், ஸ்டண்ட் – பயர் கார்த்திக் , தயாரிப்பு – பாபு ராஜா, ஜாபர் அஷ்ரப், எழுதி இயக்குபவர்- சுரேஷ் சண்முகம்.

அதிகம் படித்தவை:  விஜய்யை விட்டுகொடுக்காத ஜி.வி.பிரகாஷ்! இதை திரும்ப திரும்ப பண்ணுகிறார்..

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது….

ஒரு நடுத்தர குடும்பத்தலைவன் திருப்பதிசாமி, கால் டாக்சி டிரைவர். அவர், தனது மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோ‌ஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருப்பதி சாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை.

இந்த படம் நிச்சயம் மக்கள் மனதில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெறும், பாராட்டு வரும் என்று நம்புகிறோம்” என்றார்.இதில்  ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்து வருகிறார்.  

அதிகம் படித்தவை:  கேரளாவில் தெறி சாதனையை முறியடித்ததா 24? முழு விவரம்

நான் நல்ல நடிகையாக வேண்டும் என்பது அவரின் விருப்பம். இன்னும் அவரிடம் அடிக்கடி நிறைய கேட்டு தெரிந்துகொள்வேன். மேலும் நான் விஜய்யின் ரசிகை. வரும் காலத்தில் அவருடன் டூயட் பாட வேண்டும் என ஆசை இருக்கிறது என கூறுகிறார் ஐஸ்வர்யா லட்சுமி.

விஜய் தற்பொழுது மெர்சல் படம் நடித்து முடித்துள்ளார் இந்தப்படம் வரும் திபாவளிக்கு வர உள்ளது இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.மேலும் மெர்சல் டீசர் உலக சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.

மெர்சல் படமும் பல சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது விஜய் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன சாதனை படைக்கும் என.