புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஆர்வக்கோளாறு இல்ல ஆளே கோளாறு தான்.. நாரோடு சேர்ந்து நாறிப்போகும் பிக்பாஸ் முத்து

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து இப்போது சூடு பிடித்துள்ளது. இத்தனை வாரங்களை காட்டிலும் இந்த வாரம் தான் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. அதில் தீபக்கின் கேப்டன்சி பாராட்டுகளை பெற்று வருகிறது.

அதேபோல் இந்த வாரம் பொம்மை டாஸ்க் நடந்து வருகிறது. அதில் சில ரணகளமான சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதே சமயம் ஒரு பக்கம் தர்ஷிகா விஷால் செயற்கை தனமான காதல் சர்ச்சையாக மாறி இருக்கிறது.

மறுபக்கம் சாச்சனாவின் நடவடிக்கை வெறுப்பை சம்பாதித்து வருகிறது. கடந்த வாரம் இவர் அடித்த லூட்டியை பார்த்து விஜய் சேதுபதி லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். உடனே அழுது சீன் போட்ட லிட்டில் பிரின்சஸ் இன்னும் அதிக வெறுப்பை சம்பாதித்து விட்டார்.

வெறுப்பை சம்பாதிக்கும் சாச்சனா

அதிலும் கடுமையான போட்டியாளராக பார்க்கப்படும் முத்துவின் விளையாட்டுக்கு இவர் தடையாக இருக்கிறாரோ என்ற கருத்த எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த வாரம் இவர் கத்தி கதறி அழுதபோது அம்மா கிட்ட போகணும் என முத்துவை தான் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார்.

அதேபோல் சதா நேரமும் முத்துவுடன் இருக்கும் சாச்சனாவை பார்த்தால் ஆர்வக்கோளாறு போல் இல்லை ஆளே கோளாறு தான் என்று தோன்றுகிறது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும். ஆனால் இங்கு நாரோடு சேர்ந்த முத்துவும் நாறி போய்விடுவார் போல் இருக்கிறது.

அந்த அளவுக்கு சாச்சனா வேதாளம் போல் முத்துவின் மேல் ஏறி சவாரி செய்து வருகிறார். இந்த வாரம் இவர் வெளியேறினால் தான் முத்து பழைய ஃபார்முக்கு வருவார். அதனால் பிக் பாஸ் எப்படியாவது இந்த லிட்டில் பிரின்சஸை வீட்டை விட்டு துரத்துங்கள் என ஒரு பக்கம் பார்வையாளர்கள் கதறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News