செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

சத்யாவின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த முத்து.. PA உடன் கூட்டணி வைத்த சிட்டி, ரோகினிக்கு கொடுக்கும் டார்ச்சர்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சத்யாவின் அம்மா போலீஸ் ஸ்டேஷனுக்கு போனதால் பதட்டமான முத்து மற்றும் மீனா போலீஸிடம் கெஞ்சுகிறார்கள். அப்பொழுது இறக்கப்பட்ட போலீஸ், உங்களுக்கு ஒரு நாள் டைம் தருகிறேன். அதற்குள் சத்யாவை கூட்டிட்டு வந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லை என்றால் சத்யாவிற்கு பதில் அவருடைய அம்மாவை தான் நான் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போக வேண்டியதாக இருக்கும் என சொல்கிறார்.

இதை கேட்டதும் முத்து, நான் சத்யாவை கண்டுபிடித்து கூட்டிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறார். உடனே போலீஸ் சத்யாவின் அம்மாவை விட்டு விட்டார்கள். இதனை அடுத்து இது சம்பந்தமான விஷயங்களை வக்கீல் மூலமாக போனீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு சப்போர்ட்டாக இருக்கும் என்று போலீஸ் சொல்கிறது. உடனே முத்து, மீனாவை கூட்டிட்டு அந்த வக்கீலை பார்க்கப் போகிறார்கள்.

அதற்கு வக்கீல், வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியாகியதால் எல்லோரும் பார்த்திருப்பார்கள். அதனால் இந்த கேஸ் கொஞ்சம் கைமீறி போய்விட்டது. இதற்கு ஒரே வழி கம்பளைண்ட் கொடுத்த உங்க அம்மாவிடம் எப்படியாவது பேசி வாபஸ் வாங்கி விட்டால் பிரச்சனை கொஞ்சம் சுமூகமாக முடிந்து விடும் என்று சொல்கிறார். உடனே முத்து, மீனாவை கூட்டிட்டு வீட்டிற்கு போகலாம் என கிளம்புகிறார்.

அப்பொழுது மீனா, அத்தை தான் பிடிவாதமாக இருக்கிறார். எப்படி கேசை வாபஸ் வாங்குவாங்க என்று கேட்கிறார். அதற்கு முத்து நம்ம பேசினால் தான் அம்மா கேசை வாபஸ் வாங்க மாட்டாங்க. எப்படியாவது அப்பா மூலமாக கேசை வாபஸ் வாங்க வைக்கலாம் என்று முத்து, மீனாவை கூட்டிட்டு அண்ணாமலையிடம் பேச போகிறார். அப்பொழுது வீட்டிற்கு போய் அண்ணாமலையிடம் முத்து பேசும் பொழுது மீனா மாமனாரிடம் கெஞ்சுகிறார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மனோஜ், சத்யா நிச்சயம் தண்டனை அனுப்பி வைக்க வேண்டும் அதற்கு ஜெயிலுக்கு போனால் தான் சரிப்பட்டு வரும் என்று சொல்கிறார். உடனே முத்து, உனக்கு யாராவது ஜெயிலுக்கு போக வேண்டும் அப்படித்தானே என்று சில ரகசிய விஷயங்களை குத்தி காட்டி பேசுவது போல் தெரிகிறது. முத்து சொன்ன வார்த்தைக்கு பதில் பேச முடியாமல் திருட்டு முழி முழித்துக் கொண்டு மனோஜ் வாயை மூடிக்கொண்டார்.

பிறகு முத்து மற்றும் மீனா கெஞ்சி கேட்டதால் விஜயாவிடம் பேசுவதற்கு அண்ணாமலை பார்வதி வீட்டுக்கு போகிறார். அங்கே சத்யாவின் வாழ்க்கையையும் மீனாவின் குடும்பத்தை பற்றி எடுத்துச் சொல்லி விஜயா மனசை மாற்ற பார்க்கிறார். உடனே விஜயா நான் கேசை வாபஸ் வாங்குகிறேன், ஆனால் அதற்கு பதிலாக முத்து மற்றும் மீனா வீட்டை விட்டு போக வேண்டும் என்று செக் வைக்கிறார். ஆனால் தற்போது இவர்களுக்கு வேற வழியில்லாததால் தம்பியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மீனா வெளியே போவதற்கு சம்மதம் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் சிட்டி, ரோகினிக்கு போன் பண்ணி கூப்பிட்டதனால் வித்யாவை கூட்டிட்டு ரோகினி சிட்டியை பார்க்கப் போகிறார். அங்கே போன இடத்தில் PA பேச்சு மூச்சு இல்லாமல் மயக்கத்துடன் இருக்கிறார். அவரை காட்டி பசங்க ரெண்டு தட்டு தட்டுன உடனே நெஞ்சுவலியால படுத்துட்டாரு. இவரை இங்க இருக்க ஹாஸ்பிடல்ல போய் சேர்த்தோம் என்றால் நமக்கு தான் தேவையில்லாத பிரச்சினை.

அதனால் வேறு ஏதாவது பண்ண வேண்டும் அதற்கு எனக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்று ரோகினிடம் சிட்டி பணம் கேட்கிறார். உடனே ரோகிணி அது எப்படி எங்களால் தர முடியும், நாங்க அடிக்கல நீங்க தானே அடிச்சீங்க என்று கேட்கும் பொழுது எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீங்க சொல்லி தான் அடித்தேன். நீங்கள் ஏதோ ஒரு தவறு பண்ணியிருக்கிறீங்க அது உங்க குடும்பத்துக்கு தெரியக்கூடாது என்பதற்காக இவரை என்ன வச்சு காலி பண்ண பார்த்தீங்க.

தற்போது இந்த விஷயம் வெளி வந்தால் உங்களுக்கு தான் தேவையில்லாத பிரச்சினை என்று சிட்டி, ரோகினியை மிரட்டுகிறார். அந்த வகையில் ரோகிணிக்கு வேற வழியில்லாததால் பணத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு சிட்டி, அங்கே மயக்கத்தில் இருக்கும் PAவை எழுப்பி இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து கூட்டணி போட்டு தான் ரோகினிடமிருந்து பணம் பறிப்பதற்கு பிளான் பண்ணி இருக்கிறார்கள். தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு ஏற்ப முத்து மற்றும் மீனாவிற்கு துன்பத்தை கொடுக்க நினைத்த ரோகினிக்கு தொடர்ந்து இனி கெட்ட நேரம் தான். முத்துவை ஏன் சீண்டினோம், எதற்காக சிட்டியுடன் கூட்டணி வைத்தோம் என்று ஒவ்வொரு நாளும் ரோகிணி அல்லல்பட போகிறார்.

- Advertisement -

Trending News