விஜய் டிவியில் புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பானாலே அது எந்தப் படத்தின் காப்பி என்பதை கண்டுபிடிக்க நெட்டிசன்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி நிறுவனம் ஈஸியாக மாட்டிக்கொள்கிறது.
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி சமீபகாலமாக சீரியல்களிலும் மற்ற சேனல்களை ஓரம்கட்டி நல்ல டிஆர்பியை பெற்று வருகிறது. பார்த்து சலித்து புளித்துப்போன கதையாக இருந்தாலும் தாய்மார்களை கவர்ந்து விடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பான ஒரு சீரியலின் தமிழ் ரீமேக்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் படத்தில் அட்டகாப்பி.
இப்படி தொடர்ந்து ரீமேக் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக நன்றாக சென்று கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது வேலைக்காரன் சீரியல் தான்.
யூடியூப் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வேலைக்காரன் போல் வலம்வரும் அந்த நடிகர் தான் அந்த வீட்டிற்கே எஜமானர் என்பதை ப்ரோமோவில் காட்டியிருந்தனர்.
முதலில் ரஜினி நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்து படம் போலிருக்கிறதே என சந்தேகப்பட்ட நெட்டிசன்கள் சீரியல் வெளியான பிறகு அதை உறுதி செய்துவிட்டனர். முத்து படத்தை அப்படியே ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுத்து வேலைக்காரன் என்ற பெயரில் சீரியலாக எடுத்துள்ளனர் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.