புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வித்யா சொதப்பியதால் முத்து கையில் கிடைக்கும் போன்.. 2 விஷயத்தால் மாட்டிக்கொள்ள போகும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி அவருடைய அம்மாவையும் மகனையும் சென்னைக்கு ஓரமாக இருக்கும் ஒரு வீட்டிற்கு குடியேற்றி விட்டார். அந்த வீட்டில் பால் காய்ச்சல் முடித்துவிட்டு நிறைய கண்டிசன்களையும் போட்டிருக்கிறார். பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை வைக்கக் கூடாது.

அனாவசியமாக வெளியே போகக்கூடாது, யாரிடமும் எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது. கிரிஷை பக்கத்து வீட்டிற்கு விளையாட அனுப்பக்கூடாது போன்ற பல விஷயங்களை சொல்லி ரோகினி அம்மாவுக்கு செக் வைத்திருக்கிறார். பிறகு கிரிஷை கூட்டிட்டு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக ரோகிணி போகிறார். அங்கே சேர்த்து முடித்துவிட்டு கிருஷ் இடம் சில விஷயங்களையும் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.

ஆனால் அதே பள்ளிக்கூடத்தில் தான் முத்துவின் அப்பா அண்ணாமலையும் கணக்கு பார்க்கும் வேலையில் சேர்ந்து இருக்கிறார். அந்த வகையில் வாரத்திற்கு ஒரு முறை வந்து கணக்கு பார்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் எப்படி கிரிஷ் இங்கே இருக்கிறார் என்ற விஷயம் அண்ணாமலை மூலம் முத்துக்கு தெரிந்து விடும்.

அத்துடன் இதன் மூலம் மறுபடியும் கிரிஷ் உடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இதன் மூலம் க்ரிஷ் எப்படி இங்கே வந்தார் யார் கூட்டிட்டு வந்தார் என்ற விஷயம் முத்து கண்டுபிடித்து விடுவார். அதே மாதிரி முத்துவின் போன் ரோகினியின் தோழி வித்யாவிடம் தான் இருக்கிறது. அந்த வகையில் அந்த போன் நம்மிடம் இருந்தால் நமக்கு இன்னும் ஆபத்து என்பதால் ரோகிணி அதை எடுத்து கடலில் போட சொல்லிவிட்டார்.

அதனால் வித்தியாவும் முத்துவின் ஃபோனை எடுத்துட்டு கடலில் போடுவதற்கு கிளம்பி விடுகிறார். அப்படி போகும் பொழுது செருப்பு பிஞ்சு விட்டதால் செருப்பு தைத்து விட்டு போகலாம் என்று முத்து மற்றும் மீனாவிற்கு நெருக்கமாக இருக்கும் செருப்பு தைக்கும் தாத்தா பாட்டி வைத்திருக்கும் கடைக்கு போகிறார். அங்க போயிட்டு செருப்பை தைத்து முடித்துவிட்டு ஆட்டோவில் ஏறும் பொழுது முத்துவின் ஃபோனை தெரியாத்தனமாக கீழே போட்டு விடுகிறார்.

இதை பார்த்த செருப்பு தைக்கும் பாட்டி அதை எடுத்து பத்திரமாக வைக்கிறார். மறுபடியும் போனை தேடி வரும் பொழுது வித்யாவிடம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் வைத்திருக்கிறார். அந்த வகையில் இந்த ஃபோன் முத்து கண்ணில் படப்போகிறது. முத்து அந்த போனை வாங்கி பார்த்து இது என்னுடைய போன். எப்படி உங்ககிட்ட வந்தது, இந்த போன் காணாமல் போனதால் மிகப்பெரிய பிரச்சினையும் வந்தது என்று சொல்லப் போகிறார்.

அப்பொழுது அந்த தாத்தா பாட்டி விஷயத்தை சொல்ல வரும் பொழுது முத்து கொஞ்சம் கொஞ்சமாக போன் யார் எடுத்தார் என்பதையும் கண்டுபிடித்து விடுவார். அந்த வகையில் ரோகிணி, கிரிஷ் மற்றும் வித்யா மூலமாக மாட்டிக் கொள்ளப் போகிறார். ரோகிணி என்னதான் தில்லாலங்கடி வேலைகளை பார்த்தாலும் சின்ன சின்ன தவறுகளால் சிக்கப் போகிறார். அதுவும் ரோகிணியின் மகன் மற்றும் தோழி மூலமாக மாட்டிக் கொள்ளப் போகிறார்.

- Advertisement -

Trending News