விஜயா சொன்னதை கேட்டு மீனாவிடம் பிரச்சனை பண்ணும் முத்து.. குழந்தை பெற்றெடுக்க சுருதிக்கு உதவி செய்யும் சீதா

Sirakadikkum Asai Serial: விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தம்பி சத்யாவிற்கு நொடிந்த கை சரியாகி விட்டதாலும் பிறந்தநாள் என்பதால் அம்மனுக்கு கூழ் ஊற்றி அபிஷேகம் பண்ணலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் சத்யாவை கோவிலுக்கு கூப்பிடும் மீனாவின் அம்மா நான் வருவது என்றால் அக்கா மீனா மட்டும்தான் வரணும். முத்து மாமா அங்க வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

இதனால் கோபப்பட்ட மீனா சத்யவிடம் சண்டை போடுகிறார். அதற்கு சத்யா, எனக்கும் அவரைக் கண்டால் பிடிக்காது. அவருக்கும் என்னை சுத்தமாக பிடிக்காது அப்புறம் ஏன் இரண்டு பேரும் சந்திக்க வேண்டும். இல்லை என்றால் நான் வரமாட்டேன் அவரை கூப்பிட்டு நீங்கள் எல்லாம் பண்ணிக்கோங்க என்று சொல்கிறார். உடனே மீனாவின் அம்மா உனக்காக தான் எல்லா ஏற்பாடும் பண்ணி வைத்திருக்கிறோம். நீ இல்லாம எப்படி பண்ண முடியும் என்று சொல்கிறார்.

முத்து மீனா சந்தோஷத்தில் வேட்டுவைத்த விஜயா

அப்படி என்றால் நான் வருகிறேன் முத்து மாமா வரக்கூடாது என்று தீர்மானமாக சொல்லிவிட்டார். இதனால் மீனா எப்படி முத்துவிடம் சொல்லி சம்மதம் வாங்குவது என்று தெரியாமல் தயங்கி தயங்கி விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டதும் முத்து, நீ மட்டும் போனும் நினைக்கிறாயா? இல்லை என்றால் நான் வரவேண்டும் என்று நினைக்கிறியா என கேட்கிறார்.

அதற்கு மீனா பதில் சொல்ல முடியாமல் நிற்கும் பொழுது, என்ன உன் தம்பி வரக்கூடாது என்று சொல்லி இருப்பான் அப்படித்தானே என்று கேட்கிறார். உடனே மீனா ஆமாம் என்று சொல்லிய நிலையில் நானும் வரமாட்டேன் நீயும் போகக்கூடாது. புருஷனை மதிக்காத ஒருத்தருக்காக நீ ஏன் போக வேண்டும், அப்படி போனால் எனக்கு தான் பெரிய அவமானம் என்று சொல்லி மீனாவை போக கூடாது என்று சொல்லிவிட்டார்.

இதனால் குழப்பத்தில் இருக்கும் மீனாவிற்கு, அம்மா மற்றும் சத்யா போன் பண்ணி கூப்பிடுகிறார்கள். அப்பொழுது சுறுதியும் கொடுத்த அட்வைஸ் படி மீனா கோவிலுக்கு போய் விடுகிறார். இதையெல்லாம் ஒட்டு கேட்ட விஜயா, வீட்டுக்கு வந்த முத்துவிடம் ஒன்னு இரண்டாக வத்தி வைத்து விட்டார். உடனே முத்து கோவிலுக்கு போய் மீனாவை பார்த்து முறைத்து விட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

பிறகு வீட்டிற்கு போன மீனா, முத்து இன்னும் வரவில்லை என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். முத்து இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு லேட்டாக வருகிறார். வந்ததும் மீனாவிடம் பிரச்சினை பண்ணி என்ன மதிக்காத ஒரு இடத்திற்கு நீ போய் இருக்கிறாய். அப்போது எனக்கு என்ன மதிப்பு, இவ்ளோ தான் நீ புருஷன் மேல வச்சிருக்க பாசமா என்று சொல்லி பிரச்சனை பண்ணுகிறார்.

அத்துடன் இனி நீயும் நானும் பேசிக்கவே வேண்டாம் என்று கோபத்தில் முத்து கீழே தூங்குவதற்கு பாய் எடுத்து போட்டு மீனாவிடம் சண்டை போட்டு விலகிக் கொள்கிறார். இதற்கு இடையில் சுருதி, மீனாவின் தங்கை சீதா வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு போய் இருக்கிறார். அங்கே சீதாவிற்கு வேலை கிடைத்தது என்று தெரிந்த நிலையில் ஒரு கிப்டாக வாட்ச் கொடுக்கிறார்.

கொடுத்துவிட்டு குழந்தை வலியில்லாமல் பெற்றெடுக்கும் விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்கிறார். அந்த வகையில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை எனக்கு இந்த விஷயத்தில் நீ தான் உதவி செய்ய வேண்டும் என்று சீதாவிடம் கேட்கிறார்.

சீதாவும் ஒன்னு பிரச்சனை இல்லை இதைப் பற்றி விசாரித்துவிட்டு உங்களுக்கு எல்லா தகவலும் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு இந்த விஷயம் அதுவரை யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சுருதி, சீதாவிடம் கேட்டுக் கொண்டார். இப்படி சுருதி எடுக்கப் போகும் இந்த விஷயம் விஜயாவுக்கு தெரிந்தால் ஏதாவது பிரச்சனை பண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -