Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாரதிராஜாவின் பிளாக்பஸ்டர் ‘முதல் மரியாதை’ ரீமேக்.. சிவாஜி ரோலில் யார் தெரியுமா? நல்ல படத்தை கெடுத்துறாதீங்க!
தமிழ் சினிமாவில் எக்காலத்துக்கும் பெயர் சொல்லும் படமாக ஒரு சில படங்கள் இருக்கும். அதில் முதலிடம் முதல் மரியாதை படத்துக்குத்தான். இதுவரைக்கும் அதற்கு ஒரு மாற்று படம் இல்லை.
1985 ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் முதல் மரியாதை.
இளையராஜாவின் இசையில் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களிடம் அவ்வளவு பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது. படத்தில் வடிவுக்கரசியின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
படம் முழுக்க கிராமத்து வாசனையில் எதார்த்தம் மிக்கதாக அமைந்தது இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம். அப்போதே ஒரு வருடத்திற்கும் மேல் ஓடி மிகப்பெரிய சாதனையைப் படைத்து திரைப்படம் என்றும் கூட சொல்லலாம்.
பெரும்பாலும் பாரதிராஜா தன்னுடைய படங்களை ரீமேக் செய்ய விரும்புவதில்லை. ஆனால் முதல் மரியாதை பாரதிராஜாவுக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமான படம் என்பதால் அதை ரீமேக் செய்ய ஆசைப்படுகிறாராம்.
லாக்டோன் முடிந்த பிறகு முதல் மரியாதை படத்தில் சிவாஜிகணேசன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபுவை வைத்து மீண்டும் இந்த படத்தை எடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் நல்ல படங்களை அப்படியே விட்டுவிடுவது நல்லது என்கிறார்கள் ரசிகர்கள்.
ரீமேக் என்ற பெயரில் நல்ல படங்களை கொலை செய்வதுதான் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் நடந்து வருகிறது. சரியான கதாபாத்திரங்கள் அமையாமல் அந்த படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன.
