Tamil Cinema News | சினிமா செய்திகள்
அச்சு அசல் முத்தையா முரளிதரன் போல் மாறிய விஜய் சேதுபதி.. வைரலாகும் 800 பட மோஷன் போஸ்டர்
விஜய் சேதுபதி தற்போது முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ள செய்திதான் கோலிவுட் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்காத முத்தையா முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்பதை போன்ற கருத்துக்கள் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பரவலாக இருந்து வருகின்றன.
வருடத்திற்கு பல படங்கள் நடிக்கும் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது முதல் முறையாக ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சிறந்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பற்றிய வாழ்க்கை வரலாறு படம் 800 என்ற பெயரில் உருவாக உள்ளது.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின்போது வெளியானது. மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி அச்சு அசல் முரளிதரன் போலவே உள்ளார்.
இணையத்தில் செம வேகமாக பரவி வரும் 800 படத்தின் மோஷன் போஸ்டர் டிரெண்டிங்கில் மட்டுமல்லாமல் பல சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது.
வீடியோ பார்க்க Click Here
