Tamil Cinema News | சினிமா செய்திகள்
முத்தையா மற்றும் விக்ரம் பிரபு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? ப்ப்பா.. முரட்டுத் தனமா இருக்கே!
தமிழ் சினிமாவில் கிராமத்து படங்களை அதிரடியான கதை களத்துடன் கூறுவதில் வல்லவர் முத்தையா. ஏற்கனவே இவர் இயக்கிய கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ஆனாலும் ஒரே மாதிரியான திரைக்கதையுடன் அவரது படங்கள் இருப்பதால் சமீபத்தில் வெளியான கொடிவீரன், தேவராட்டம் தோல்வியை சந்தித்தது. மேலும் முத்தையா மீது மக்களிடையே ஜாதி படங்கள் இயக்குவது போன்ற பிம்பம் இருக்கிறது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய அடுத்த பட வேலைகளை அசுர வேகத்தில் முடித்துள்ளார் முத்தையா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீபாவளிக்கு நாங்க ரொம்ப பிஸி என்ற படத்தை தயாரித்து நேரடியாக டிவியில் வெளியிட்டது.
அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் அதே மாதிரி ஒரு படத்தை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ். முத்தையா இயக்கும் அந்த படத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் நடித்து வருகின்றனர்.
முத்தையா படங்களின் தலைப்பு எப்போதுமே முரட்டுத்தனமாக இருக்கும் பட்சத்தில் முதலில் இந்த படத்திற்கு வைக்கப்பட்ட பெயர் பேச்சி என்பதாம். ஆனால் பழைய படங்களைப் போல கம்பீரமாக இல்லையே என்று கூறிய பிறகு தற்போது படத்தின் தலைப்பை புலிக்குத்தி பாண்டியன் என மாற்றி விட்டார்களாம்.
இப்பதாயா வெறித்தனமா இருக்கு என கூட இருப்பவர்கள் முத்தையாவை உசுப்பேற்றி விட அதே தலைப்பை படத்திற்கு வைத்து விட்டாராம். இதுவும் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பற்றி பேசும் படமாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

muthaiah-vikram-prabhu
புலிகுத்தி பாண்டியன் படம் வருகிற பொங்கலுக்கு சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, முந்தைய படங்கள் போல இந்த படத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
