fbpx
Connect with us

கப்பெல்லா திரை விமர்சனம்.. நுனி சீட்டுல உக்காரா வச்சி த்ரில்லரில் இப்படி மிரட்டிட்டாங்களே

Reviews | விமர்சனங்கள்

கப்பெல்லா திரை விமர்சனம்.. நுனி சீட்டுல உக்காரா வச்சி த்ரில்லரில் இப்படி மிரட்டிட்டாங்களே

யதார்த்தமான சினிமாக்களை அதிகளவில் எடுத்து அசத்துவது மோலிவுட் ஸ்டைல் என்றே தான் சொல்லவேண்டும். ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, நம் கண்முன்னே அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் நடப்பது போன்ற பல படங்களை இண்டஸ்ட்ரீ தந்துள்ளது. விருதுகள் என்பது மட்டுமன்றி, பாக்ஸ் ஆபிஸிலும் இப்படங்கள் வெற்றி பெறுவது தான் கூடுதல் பிளஸ் சமாச்சாரம்.

அந்த லிஸ்டில் சமீபத்தில் இடம் பெற்ற படம் தான் கப்பெல்லா. அலையால சினிமாவில் நடிகராக பரிச்சயம் ஆன முஸ்தபா இயக்கியுள்ளம் படம். திரை அரங்குகளில் மார்ச் 6 ரிலீஸானது. எனினும் கொரோனா லாக் டவுன் காரணமாக படம் முடங்கியது. சமீபத்தில் இப்படம் நெட் பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி அணைத்து தரப்பின் பாராட்டையும் பெற்று வருகிறது.

(KAPPELA) கதை – மலைப்பிரதேசத்தில் பள்ளி படிப்பில் பெயில் ஆகி வீட்டில் இருக்கும் பெண் ஜெஸ்ஸியாக அன்னா பென் நடித்துள்ளார். ஸ்கூல் போகும் தங்கை, டைலர் வேலை செய்யும் தாய், மிளகு பறிக்க, ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் தந்தை என்ற சராசரி மிடில் க்ளாஸ் குடும்பம்.

அம்மாவின் கஸ்டமர் ஒருவருக்கு போன் பண்ண நம்பர் மாறி போக ஆட்டோ டிரைவர் விஷ்ணுவிற்கு (ரோஷன் மாத்தியூ) wrong நம்பர் அழைப்பு செல்கிறது. பின்பு இருவரும் பேசி நட்பாகி, அது காதலாக மாறுகிறது. ஜெஸ்ஸிக்கு திருமண வரன் வர, இதுவரை பார்க்காத காதலனை சந்திக்க டவுன் நோக்கி பயணிக்கிறான் தனியாக.

மறுபுறம் கோபக்காரனான ராய் (ஸ்ரீநாத் பாசி) வேலை தேடி அலைபவன். டீச்சர் ட்ரைனிங் முடித்த தன் காதலியின் உதவியுடன் வேலை தேடும் படலத்தில் உள்ளான். வீண் சண்டைக்கு போகாதவன், ஆனால் வரும் சண்டையை விடுபவன் அல்ல. இவனும் வேலை தேடி டவுனுக்கு வருகிறான்.

விஷ்ணுவின் போன் பஸ் ஸ்டாண்டில் தொலைத்து விட, வேலை கிடைக்காத விரக்த்தியில் உள்ள ராயிடம் போன் கிடைக்கிறது. காதலன் போன் சுவிட்ச் ஆப் ஆக இருக்க டாய்லெட்டில் தஞ்சம் அடைகிறாள் ஜெஸ்ஸி. ராய் அவளை சந்திக்கிறான், அதே நேரத்தில் விஷ்ணு தேடிப்பிடித்து வர, போனை கொடுத்துவிட்டு செல்கிறான் ராய்.

இந்த ஜோடி சிட்டியை சுற்றி வர, பின் தொடர்கிறான் ராய். விஷ்ணுவிற்கும் – ராய்க்கும் தகராறு ஏற்பட, ஹோட்டலில் ரூம் புக் செய்து ஒதுங்குகிறது காதல் ஜோடி. தன் நண்பனுடன் இணைந்து குடித்து விட்டு விஷ்ணுவை தேடி அடித்து விட்டு தான் செல்வேன் என சுற்றி வருகிறான் ராய்.

விஷ்ணு ஜெஸ்ஸியிடம் தவறாக நடக்க முயல, அவனின் குரூர எண்ணம் ஜெஸ்ஸிக்கு மட்டுமன்றி படம் பார்க்கும் நமக்கும் புரிய வருகிறது. ராய் வந்து அவளை காப்பாற்றுகிறான். ராயின் காதலி நீ பத்திரமாக ஊருக்கு போ ஜெஸ்ஸி, நல்ல வேலை இந்த் விஷயம் யாருக்கும் தெரியாது. போலீசுக்கும் போக வேண்டாம். குடும்பத்துடன் பத்திரமாக இரு என்கிறாள்.

தன் ஆசையான கடலுக்கு ராயை கூட்டிப்போக சொல்கிறாள், பின் தன் ஊரில் அவள் வாழ்க்கையை தொடர்கிறாள்.

சினிமாபேட்டை அலசல் – காமுகன் காசியாகட்டும், பொள்ளாச்சி விவகாரம் என எவ்வளவு விஷயம் நாம் கேள்விப்பட்டாலும், ஆண்களின் ஏமாற்று வலையில் சிக்கி பெண்கள் சின்னாபின்னம் ஆகும் சம்பவங்கள் தினம்தோறும் நடந்து தான் வருகின்றது. அப்படி ஒரு நிகழ்வை நம் கண்முன்னே ஸ்க்ரீனில் கொண்டுவந்துள்ளது இப்படக்குழு. பள்ளி மாணவர் , மாணவியர் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தான் இது.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – அழுத்தமான கருத்தை பதிவிட்ட இப்படம் கண்டிப்பாக பல விருதுகளை குவிக்கும். லாக் டவுனில் கட்டாயம் பார்க்கலாம் ஒருமுறை இப்படத்தை

சினிமாபேட்டை ரேட்டிங்: 3.5 \ 5

Continue Reading
To Top