மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 5 லவ் ஸ்டோரீஸ்.. 2k ஹிட்ஸ்கள் கொண்டாடிய மணிரத்தினத்தின் காதல் கதை

சினிமாவை பொறுத்த வரை 10ல் 6 படங்கள் காதலை மையப்படுத்தி தான் வெளியாகும். வித்தியாசமான காதல் கதைகள் பல வந்தாலும், ஒரு சில படங்கள் தான் நம் மனதுக்கு நெருக்கமாகவும், நம் வாழ்க்கையோடு தொடர்புடையதாகவும் மாறிவிடும். இந்த படங்களை எல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

1.அலைபாயுதே: காதல் கதைகள் என்றாலே அதில் முதலில் நியாபகம் வருவது கார்த்திக்-சக்தியின் காதல் தான். இளமை துள்ளலுடன் மாதவன், துறுதுறுவென சுற்றி வரும் ஷாலினி படம் முழுக்க கார்த்திக்-சக்தியாகவே வாழ்ந்து விட்டார்கள். வீட்டிற்கு தெரியாமல் திருமணம், கல்யாணத்திற்கு பின்னான புரிதல் என இப்போது பார்த்தாலும் பசுமை மாறாமல் இருக்கும். 80ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அலைபாயுதே படத்திற்கு ரசிகர்கள் அதிகம். ஏ ஆர் ரகுமான் இசையில் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

Also Read: சக்சஸ் கொடுக்காமலேயே பல கோடி சொத்து மதிப்பு.. மாதவனின் ரகசியத்தை வெளியிட்ட பயில்வான்

2.வாரணம் ஆயிரம்: கௌதம் மேனனை போன்று காதல் கதை எடுக்க ஒருவர் பிறந்து தான் வர வேண்டும். திருமணத்திற்கு பின்னும் தன் மனைவியை அவ்வளவு காதலிக்கும் கிருஷ்ணன், மேக்னாவிற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா, சூர்யாவை தேடி ஆர்மி கேம்ப் செல்லும் ப்ரியா என அவ்வளவு காதல் நிறைந்தது வாரணம் ஆயிரம். படம் முழுக்க காதலை கவிதையாக சொல்லியிருப்பார் கௌதம்.

3.விண்ணை தாண்டி வருவாயா: ‘உலகத்துல எத்தனையோ பொண்ணு இருக்க நா ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்’ இந்த ஒற்றைக் கேள்விக்கான கார்த்திக்கின் தேடல் தான் விண்ணை தாண்டி வருவாயா. சேராத காதலாக இருந்தாலும் கார்த்திக்கையும், ஜெஸ்ஸியையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது.

Also Read: மறக்கமுடியாத கதாபாத்திரத்தை தவறவிட்ட 5 நடிகர்கள்.. தனுஷின் வெற்றி படத்தை இழந்த சிம்பு

4.ஓ காதல் கண்மணி: லிவ்விங் ரிலேஷன்ஷிப் காதலை கூட ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி இந்த படத்தில் காட்டியிருப்பார் மணிரத்தினம். துல்கர் சல்மானுக்கு தமிழில் இது முதல் படம். திரையில் துல்கரை பார்ப்பதா இல்லை நித்யா மேனனை பார்ப்பதை என போட்டி போட்டு நடித்திருப்பார்கள் இருவரும். ஆதி-தாராவாக இருவரும் உண்மையிலேயே வாழ்ந்து இருப்பார்கள்.

5.நீதானே என் பொன்வசந்தம்: பள்ளிப்பருவத்தில் இருந்து வளரும் காதல், காதலர்களுக்குள் பிரச்சனை என்றால் தூக்கி எறிய வேண்டியது ஈகோவை, காதலை இல்லை என்பதை எடுத்து சொன்ன திரைப்படம் தான் நீதானே என் பொன்வசந்தம். தமிழ் சினிமாவின் காதல் கதைகளில் மறக்க முடியாதவர்கள் வருண்-நித்யா.

Also Read: ஜீவா கேரியரை சோலி முடித்த 6 படங்கள்.. பத்து வருஷமா விழுந்த அடியால் மீள முடியாத நிலை

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்