புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வெளியாகி 6 வருடமாகியும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பேய் படம்.. எதுல பாக்கலாம்?

வெறும் 25 கோடி பட்ஜெட்டில் உருவான ஒரு படம், பல மடங்கு லாபத்தை பெற்றதோடு, அந்த படம் திரையரங்கில் வெளியாகும்போது சக்கை போடு போட்டது. இந்த படம் OTT-யில் வெளியான பின்பும், மக்களை பெருமளவு கவர்ந்தது. அதுமட்டுமல்ல, இந்த படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றளவும் ட்ரெண்டிங் பட்டியலில் உள்ளது.

திகில்-காமெடி திரைப்படமாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஷ்ரத்தா கபூர் நடிப்பில் இந்த படம் வெளியானது. . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் அசத்தியிருப்பார்கள். பொதுவாக காமெடி கலந்த ஹாரர் படம் வெளியாகும்போது, சிரிக்க வைத்தாலும், மிரள வைப்பதில்லை. ஆனால் இந்த படம் ரெண்டையும் செய்தது.

இந்த படம் இந்தியாவின் முதல் 10 வர்த்தகப் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இந்த படம் வெறும் 25 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் 7 மடங்கு அதிகமாக வசூல் வேட்டை செய்தது. 2018 ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது..

அது என்ன படம்? எங்கே பார்க்கலாம்

உலகம் முழுவதும் 180 கோடி வசூல் செய்த இந்த படத்தின் இரண்டாம் பாகம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் தான் இந்த படத்திலும் நடித்தார்கள். மேலும் இந்த இரண்டாம் பாகம், உலகம் முழுவதும் 800 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியது.

இந்த படத்தின் பெயர் ஸ்த்ரீ, சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. இந்த படத்தை தியேட்டர் பார்வையாளர்கள், OTT பார்வையாளர்கள் என்று இரு தரப்பினரையும் திருப்தி படுத்தியுள்ளது.

இதை நீங்கள் Disney Hotstar OTT தளத்தில் பார்க்கலாம். முதல் பாகம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றளவும் முதல் பாகம் ட்ரெண்டிங்கில் உள்ளது.

- Advertisement -

Trending News