இசை மட்டும் போதாது: புதிய முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரகுமான்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீமஸ்க்’ என்ற படத்தை ‘விர்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பத்தில் இயக்கி வருகிறார். அவரே இசை அமைக்கும் இந்த படம் ரோம் நகரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இசை அமைப்பாளராக சாதனை படைத்து ஆஸ்கார் விருதை வென்ற ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட்டிலும் இசை அமைத்தார். இப்போது இயக்குனர் ஆகி இருப்பது குறித்து பேசிய ஏ.ஆர்.ரகுமான்,

“25 வருடங்களுக்கு முன்பு ‘ரோஜா’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆன போது எப்படி இருந்தேனோ இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன். அப்போது மணிரத்னமும், என்னுடைய குடும்பத்தாரும் மட்டும் தான் எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்போது பலருடைய ஆதரவு எனக்கு இருக்கிறது.

இந்த படம் புதிய தொழில் நுட்பத்தில் உருவாகிறது. இது ஒரு புதிய சோதனை முயற்சி. இந்த வி.ஆர்.தொழில்நுட்பத்தை மக்கள் எப்படி ரசிக்கப்போகிறார்கள் என்பதில்தான் எனது எண்ணம் இருக்கிறது. படம் பற்றிய கருத்துக்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன்.

`பாகுபலி’ போன்ற பிரம்மாண்ட படங்கள் எடுக்க இங்கு பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். என்னிடம் ரூ.200 கோடி பட்ஜெட் எல்லாம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இன்னொரு படத்தையும் ஏ.ஆர்.ரகுமான் இயக்குகிறார். இது ‘வி.ஆர்.மூவி பேஸ்’ என்ற புதிய முறையில் இந்திய நடனம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படமாக உருவாகிறது.

Comments

comments

More Cinema News: