மாத்தியோசி, குகன், கோட்டி போன்ற படங்களில் இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளேன். கடந்த சில மாதங்களாக இறைவன் அருளால் யூடியூபில் எனது இணையதளமான ‘குருகல்யாண்ம்யூசிக்’ மூலம் தனிப்பாடல்களை வெளியிட்டு வருகிறேன். ‘குழந்தைகள்’ தினப்பாடல், ‘வீரத்தமிழன்’ எனும் ஜல்லிக்கட்டு பாடல், ‘பாடலாசிரியர் அண்ணாமலை’ அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாடல், விவசாயம் தொடர்பான ‘வதுவை நன்மணம்’ எனும் தனிக்கவிதைக்கு பாடல் போன்றவை வெளியிட்டு வந்தேன். இதற்கு, இணையத்தளம் வாயிலாக சிறந்த வரவேற்பை பெற்றேன். அப்படியாக வெளிவந்த பாடலில் ஒன்றான “வதுவை நன்மணம்” எனும் பாடலுக்கு, நடிகர் விஜயின் ஆஸ்தான பாடலாசிரியரான பழநிபாரதி எழுதியிருந்ததால் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் கூடுதல் வரவேற்பை பெற்றது.

நடிகர் விஜய் அவர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் இருக்கும் தனிச்சிறப்பை கண்டு வியந்து, அவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், நெகிழ்ச்சியான தொடர்பை சொல்லும் வகையிலும் ‘இளையதளபதி ரசிகன் டா’ எனும் பாடலை உருவாக்க எண்ணினேன். மெட்டமைத்தவுடன் கவிஞர் பழநிபாரதி அவர்களையே இதற்கு பாடல் எழுதித்தரும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார். ‘கில்லி நாங்கடா சொல்லி அடிப்போம்’ எனும் இந்த பாடல் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ‘பெர்பெக்ட் விஜய் ஆன்தம்’ என்று ரசிக்கப்பட்டு வருகிறது. இப்பாடல் மேலும் அனைத்து ‘விஜய் ரசிகர்களுக்கும்’ சென்றடைய இந்த பத்திரிக்கை சந்திப்பின் மூலம் மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

www.youtube.com/gurukalyanmusic