Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த இயக்குனருக்கு ரெண்டு ஆஸ்கார் பார்சல்.. சந்தோஷ் நாராயணன் பாராட்டிய இயக்குனர் யார் தெரியுமா ?

santhosh-narayanan

சந்தோஷ் நாராயணன்

திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். பி இ கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவர். டிகிரி முடித்த பின் சில காலம் சவுண்ட் ரெகார்டிங், ப்ரோக்ராம்மிங் என இருந்தார். பின்னர் தனி இசை அமைத்துவந்தார்.

2012ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா II: வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலம் ஆனவர்.

கபாலி, பைரவா இரண்டு படங்களுக்கு பிறகு இவரின் ரேஞ் வேற லெவல் தான். சமீபத்தில் வெளியான மெர்குரி, பரியேறும் பெருமாள், வடசென்னை என அனைத்தும் ஹிட் தான்.

இவர் இசையில் ஜிப்ஸி படத்துக்காக அனைவரும் வைட்டிங் தான்.

இந்நிலையில் இவர் பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றி ட்வீட் ஒன்றை தட்டியுள்ளார். “ஹலோ ஹோலிவுட்டா ? ரெண்டு ஆஸ்கார் பார்சல் பண்ணுங்க. மாரியின் படைப்பை கவுரவித்த தமிழ் சமூகத்துக்கு என் உணர்வுபூர்வமான நன்றிகள். நீ நம் செல்ல டான் தனுஷுக்காக ரெடி செய்திருக்கும் அசத்தலான சகிரிப்டுக்காக காத்துக்கிடக்கிறேன்.” என மாறி செல்வராஜின் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.

Mari Selvaraj

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top