திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

பிக்பாஸ் தாமரைக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இசையமைப்பாளர்.. சர்ச்சையை கிளப்பும் விஷயம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தாமரைச்செல்வி. தெருக்கூத்து கலைஞரான இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதை எல்லாம் தைரியமாக கடந்து ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளராக இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தன்னுடைய குடும்ப கஷ்டங்களை பற்றி தாமரை நிறைய கூறியிருக்கிறார். இருப்பினும் பிக்பாஸ் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பாத அவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்றார். ஆனாலும் அவர் இறுதிப்போட்டிக்கு செல்லாமல் எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்கள் பலருக்கும் வருத்தம்தான்.

அந்த வகையில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட இவர் சிம்பு தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிம் பங்கேற்றார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் தன் கணவருடன் பங்கேற்று அசத்தி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவருக்காக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது ஒரு டபுள் பெட்ரூம் கொண்ட வீட்டை கட்டி கொண்டிருக்கிறாராம். இதில் உனக்கு ஏன் வயிறு எரியுது என்று நீங்கள் கேட்கலாம். தாமரை ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை விவாகரத்து செய்தவர்.

தற்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தாமரைக்கும் அவருடைய இரண்டாவது கணவருக்கும் கூட ஏதோ கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் விஜய் டிவியில் இருந்து வந்த வாய்ப்புக்காக தான் அவர்கள் இருவரும் தற்போது ஜோடி நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இப்படி தாமரையின் வாழ்க்கை பல சர்ச்சைகள் நிறைந்ததாக இருக்கிறது. தற்போது ஜேம்ஸ் வசந்தன் அவருக்கு வீடு கட்டி கொடுப்பதும் ஒரு சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன் ஜேம்ஸ் வசந்தன் சில சில்மிஷ பிரச்சனைகளை சந்தித்து காவல் நிலையம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இவர் ஏன் தாமரைக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த விஷயம் தான் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -spot_img

Trending News