Tamil Cinema News | சினிமா செய்திகள்
முதன்முறையாக சூர்யாவுக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்.. வேற ஆளே கிடைக்கலையா
சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு படங்களும் நினைத்த அளவு அவருக்கு வெற்றியை தரவில்லை. இதனால் எப்படியாவது வசூல் ரீதியாக ஒரு பெரிய ஹிட் கொடுத்துவிட வேண்டும் என பூக்குழி இறங்காத குறையாக வேண்டி கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடைய ஆஸ்தான இயக்குனராக கருதப்படும் ஹரியிடம் தஞ்சம் அடைந்துள்ளார். ஆனால் ஹரியின் சமீபத்திய படங்கள் எந்த நிலைக்கு சென்றது என்பதை சற்று நினைத்திருந்தால் இப்படி செய்திருக்க மாட்டார்.
ஹரியும் சூர்யாவும் தாங்கள் ஒரு வெற்றிக் கூட்டணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆகையால் வழக்கம்போல் கிராமத்து கதையை தேர்ந்தெடுத்து ஆக்சன் மசாலா கலந்து கொடுக்கும் முனைப்பில் உள்ளனர். அந்த வகையில் மண் மனம் மாறாத இசைக்காக இசையமைப்பாளர் டி இமான் இடம் தஞ்சமடைந்துள்ளனர்.
சமீபத்தில் வெளிவருகின்ற கிராமத்து படங்கள் அனைத்துக்கும் டி இமான் தான் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்த கதையே. ஆனால் சூர்யா ரசிகர்கள் புதிய இளம் இயக்குனர்களுடன் சூர்யா பணியாற்ற வேண்டுமென ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருந்தும் நான் தலை கீழாகத்தான் குதிப்பேன் என ஹரியிடம் சென்றதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இருந்தும் வேற வழி இல்லாமல் சப்போர்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
