கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் ஆதித்யன். இதையடுத்து 63  வயதான ஆதித்யன், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று ஹைதராபாத்தில் காலமானார்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதித்யன், கார்த்திக் நடித்த அமரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக்கை பாடவைத்து, அவர் இசையமைத்த வெத்தலப் போட்ட சோக்குலதான் பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது.

‘நாளைய செய்தி’, ‘டேவிட் அங்கிள்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘தொட்டில் குழந்தை’, ‘மாமன் மகள்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்கள் சிலவற்றுக்கும் இசையமைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  2017-ல் இதுவரை அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள்

இது வரை 25 படங்களுக்கும்  மேல் இசையமைத்தவர் ஆதித்யன். சீவலப்பேரி பாண்டி படத்தில் ஆதித்யன் இசையமைத்த கிழக்கு செவக்கையிலே பாடலும் தமிழகம் எங்கும் ஹிட்டாகி, அனைவராலும் முணுமுணுக்க பட்ட பாடல். இவர் ஏராளமான தமிழ் பாப், ரீமிக்ஸ் ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.இவரின் உதவியாளராக இருந்து இசையமைப்பாளர் ஆனவர் தான் இமான்.

பின்னர் ஆதித்யன், பட வாய்ப்புகள் குறைந்ததால், சமையல் கலை வல்லுநராக வலம் வந்தார். ஜெயா டிவியில், ‘ஆதித்யன்ஸ் கிச்சன்ஸ்’ என்ற சமையல் நிகழ்ச்சியை 8 வருடங்களாக நடத்தி வந்தார்.

அதிகம் படித்தவை:  இணையதளத்தை கலக்கும் சன்னிலியோனின் லேட்டஸ்ட் புகைபடங்கள்.!

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் ஓவியம் வரையும் திறமையும் கொண்ட ஆதித்யன் பல்வேறு பிரபலங்களை படமாக வரைந்து தனது வீட்டின் சுவரில் அலங்கரித்து வைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இவர், ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.