fbpx
Connect with us

Cinemapettai

அஜித்துக்கு தல பட்டத்தை முருகதாஸ் கொடுக்க வில்லையாம்.. அதுவும் உதவி இயக்குனரிடம் இருந்து சுட்டதாம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்துக்கு தல பட்டத்தை முருகதாஸ் கொடுக்க வில்லையாம்.. அதுவும் உதவி இயக்குனரிடம் இருந்து சுட்டதாம்!

சமீபகாலமாக முருகதாஸின் பெயர் கோலிவுட் வட்டாரங்களில் படு டேமேஜ் ஆகி வருகிறது. தர்பார் பட விவகாரங்களில் மொத்தமாக முருகதாஸின் முகத்திரை கிழிந்தது.

சுயநலவாதி எனும் அளவுக்கு வினியோகஸ்தர்கள் முருகதாசை கண்டபடி திட்டி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இனி முருகதாஸ் எந்த படம் இயக்கினாலும் விநியோகஸ்தர்கள் தரப்பில் ஒரு பிரச்சனை இருக்கும்.

முருகதாஸ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருவதற்கு தல அஜித் தீனா என்ற முதல் பட வாய்ப்பைக் கொடுத்தது தான் காரணம். அந்த படத்திலிருந்து அஜித்துக்கு தல என்ற பட்டப்பெயர் ஒட்டிக் கொண்டது.

இன்று தமிழ்நாட்டில் தல என்று கூறினால் அது அஜித்தை குறிப்பதுதான். இப்படி இருக்கையில் முருகதாஸின் குருநாதரான பிரவீன் காந்தி வலைப்பேச்சு சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் தீனா படத்தில் அஜித்துக்கு தல என பட்டபெயர் வைத்தவர் உதவி இயக்குனர் மோகன் என்பவர் தான் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது பெயர் வெளியில் தெரியாமல் முருகதாஸ் தனக்கு தானே பெருமை வாங்கிக் கொண்டார் என கூறியுள்ளார்.

முருகதாஸின் சமீபத்திய படங்கள் தனது உதவியாளர்களின் கதைகளைத் திருடி எடுத்து வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. கத்தி, சர்கார் போன்ற படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top