Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-murugadoss-next-movie-2020

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடுவில் புகுந்து குட்டையை குழப்பிய முருகதாஸ்.. சுதா கொங்கராவை கழட்டிவிட்ட விஜய்

தளபதி விஜய் சுதா கொங்கரா படத்தில் நடிக்கவில்லை என்ற செய்திதான் தற்போது சினிமா உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து திறமையான இளைஞர்களை கொண்டு படங்கள் நடித்து வரும் விஜய் ஏன் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வில்லை என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

விஜய் தற்போது மாஸ்டர் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு ஓய்வில் உள்ளார். இந்நிலையில் விஜய் தனது 65வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கொடுப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ளன.

ஆனால் இயக்குனர் யார் என்பதில் நீண்ட நாட்களாக சஸ்பென்ஸ் நிலவியது. சுதா கொங்கரா இறுதிகட்டமாக இருந்த நிலையில் திடீரென நடுவில் புகுந்து குட்டையை குழப்பி உள்ளார் முருகதாஸ். முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போகவே உடனடியாக சுதாவை நீக்கிவிட்டு முருகதாசுக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து விட்டாராம்.

மேலும் முருகதாஸ் சொன்ன கதை ஏற்கனவே விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தான் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. முதன் முதலாக விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி படம் வசூலில் வேற அளவில் சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.

சமீபகாலமாக இரண்டாம் பாகங்களாக வரும் படங்கள் எதுவும் அவ்வளவு பெரிய வெற்றிகளை பெறவில்லை என்பது தமிழ் சினிமாவுக்கு சோகமான விஷயம்தான். இதை விஜய்-முருகதாஸ் கூட்டணி மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top