Connect with us

Cinemapettai

ஹீரோ கிடைக்காமல் அல்லாடும் முருகதாஸ்.. எப்படி இருந்த மனுசன், இப்படி ஆயிட்டாரே!

murugadoss-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹீரோ கிடைக்காமல் அல்லாடும் முருகதாஸ்.. எப்படி இருந்த மனுசன், இப்படி ஆயிட்டாரே!

ஒரு காலத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க போட்டி போட்டுக் கொண்டிருந்த நடிகர்கள் தற்போது அவரை மொத்தமாக ஒதுக்கியது பெரும் சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் தல அஜித், தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகியோருக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அவர்களின் மார்க்கெட் உயர காரணமாய் இருந்தவர் தான் முருகதாஸ்.

அதுவும் தளபதி விஜய்க்கு துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக இருப்பதற்கு பெரிதும் காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் முருகதாஸ் தளபதி 65 படத்தை இயக்க இருந்த நிலையில் திடீரென தளபதி விஜய்க்கு முருகதாஸ் கதை பிடிக்காததால் ஒதுக்கிவிட்டார்.

அதன் பிறகு பல முன்னணி நடிகர்களை கேட்டும் முருகதாசுக்கு பட வாய்ப்பு தர யோசிக்கிறார்களாம். சமீபகாலமாக வந்த முருகதாஸ் படங்கள் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை என்பதே முக்கிய காரணம்.

murugadoss-cinemapettai

murugadoss-cinemapettai

இதனால் சில மாதங்களுக்கு சிறப்பான கதையை தயார் செய்ய நேரம் ஒதுக்கியுள்ள முருகதாஸ், விரைவில் முன்னணி நடிகரின் பட அறிவிப்புடன் வருவார் என்கிறார்கள் சினிமா வாசிகள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top