Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏஆர் முருகதாஸின் அடுத்த படம் இதுதான்.. த லயன் கிங் பட ரேஞ்சுக்கு பில்டப் தராங்களே!
தர்பார் பட சங்கடத்திற்கு பிறகு விஜய் படத்தை இயக்கி தனக்கு வந்த கெட்ட பெயரை மாற்றிவிடலாம் என நினைத்தார் முருகதாஸ்.
ஆனால் விஜய் எடுத்த அதிரடி முடிவால் தற்போது விஜய்யின் அடுத்த படத்தை இயக்க முடியாமல் போனது. முருகதாஸை மாற்றி விட்டார் விஜய்.
இதனால் சில மாதங்கள் அமைதியாக இருந்த முருகதாஸ் தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம்.
ஹாலிவுட் சினிமாவைப் போல தற்போது தமிழ் சினிமாவில் சம்பந்தப்பட்ட OTT நிறுவனங்களுக்கு நேரடியாக படம் இயக்கி கொடுக்கின்றனர்.
அந்த வகையில் ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்காக முருகதாஸ் முதல் முறையாக அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.
மேலும் முதல் முதலாக ஒரு தமிழ் டைரக்டர் நிறுவன ஊழியர்களுடன் பணியாற்றுவது இதுவே முதல் முறையாம்.
சமீபத்தில் அனிமேஷன் படமாக வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த த லயன் கிங் படம் போலவே வேறு ஒரு படம் எடுத்துக் கொடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

the-lion-king-cinemapettai
தற்போது முருகதாஸ், தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த சவாலை ஏற்று அதிரடியாக களம் இறங்கியுள்ளாராம்.
