Connect with us

Cinemapettai

போயும் போயும் அந்த நடிகருடன் கூட்டணியா? எனக்குனு ஒரு ரேஞ்சு இருக்கு என்ற முருகதாஸ்

murugadoss-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போயும் போயும் அந்த நடிகருடன் கூட்டணியா? எனக்குனு ஒரு ரேஞ்சு இருக்கு என்ற முருகதாஸ்

தளபதி 65 படத்திலிருந்து முருகதாஸ் விலகியதை தொடர்ந்து அவரது அடுத்த படத்தை பற்றிய வதந்திகள் அளவுக்கதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகருடன் முருகதாஸ் கூட்டணி அமைக்க உள்ளார் என்ற செய்தி கேட்டு கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சி அடைந்தது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க இருந்த தளபதி 65 படத்தை முதலில் முருகதாஸ் இயக்க இருந்ததும், பின்னர் முருகதாஸ் கேட்ட சம்பளம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கட்டுபடியாகாததால் விஜய் இளம் இயக்குனருடன் கூட்டணி அமைத்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து முருகதாஸ் தற்போது ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

இந்த வதந்திகளால் ஏற்கனவே நொந்து போயிருந்த முருகதாஸுக்கு, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல வளர்ந்து வரும் இளம் நடிகரான சிவகார்த்திகேயனுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளார் என ஒரு வதந்தியை பரப்பி விட்டனர்.

murugadoss-sk-cinemapettai

murugadoss-sk-cinemapettai

இந்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் காட்டுத்தீ போல் பரவி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஒரே ஒரு தோல்விப்படம் கொடுத்ததற்கு முருகதாஸ் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என அவரை பாவமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்களாம்.

இதனால் டென்ஷனான முருகதாஸ், என்னுடைய அடுத்த பட அறிவிப்பை தானே அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் எனவும், அதுவரை இந்த வதந்தி கிளப்பு விடுபவர்களை தயவுசெய்து கட்டுப்படுத்துங்கள் எனவும் தன்னுடைய அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம்.

முன்னதாக ஏ ஆர் முருகதாஸ் கதை எழுதி தயாரித்த மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top