fbpx
Connect with us

Cinemapettai

அவருடன் இணைந்தால் படம் மரண மாஸாக இருக்கும் என்ற முருகதாஸ்.. ஏன் ரஜினியை வெச்சு செஞ்சது பத்தாதா என்ற ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவருடன் இணைந்தால் படம் மரண மாஸாக இருக்கும் என்ற முருகதாஸ்.. ஏன் ரஜினியை வெச்சு செஞ்சது பத்தாதா என்ற ரசிகர்கள்

பகல்ல போற பசுமாட்டை விட்டுட்டு ராத்திரியில போற எரும மாட்ட தடவ பார்த்த கதைதான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சமீபகாலமாக ஏ ஆர் முருகதாஸ் மீது ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதற்கு காரணம் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருவதால் தான்.

உப்பு சப்பு இல்லாத கதைகளை பெரிய நடிகர்களை வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். இருந்தாலும் படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

அதுவும் சமீபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த சர்கார் மற்றும் தர்பார் ஆகிய படங்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து தயாரிப்பு நிறுவனத்தை ஆட்டம் காண வைத்தது.

இந்நிலையில் தளபதி65 படத்திற்கு மீண்டும் முருகதாசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இருந்தாலும் துப்பாக்கி படத்தை கொடுத்து விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி விட்டதால் சகித்துக் கொள்கின்றனர்.

எப்படியாவது தளபதி65 படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என முருகதாஸ் இராப்பகலாக கதையை மெருகேற்றி வருகிறாராம்.

என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க, ஆனால் மசாலா படத்தை மட்டும் எடுத்து விடாதீர்கள் என்கிறார்கள் ரசிகர்கள்.

இது ஒருபுறமிருக்க முருகதாஸ் சமீபத்திய பேட்டியில், ஏன் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவில்லை என்று கேட்டதற்கு, பிற்காலத்தில் அவர் உடன் இணையும் படம் டபுள் மாஸாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த வார்த்தையை கேட்டவுடன் ரஜினி ரசிகர்களுக்கு எங்கிருந்து தான் இவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. இத சொல்லி சொல்லித்தான் தலைவரை வெச்சு செஞ்ச என கொலவெறியில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தளபதி ரசிகர்கள் முதலில் தளபதி 65 படத்தை நல்ல படமாக கொடுக்கும் வழியை பாருங்கள் என அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

Continue Reading
To Top