Connect with us
Cinemapettai

Cinemapettai

‘என் அடுத்த ஹீரோ நீதான்’ என சொல்லியே காலை வாரிய முருகதாஸ்.. பெரிய டுபாக்கூரா இருப்பாரு போலியே

murugadoss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘என் அடுத்த ஹீரோ நீதான்’ என சொல்லியே காலை வாரிய முருகதாஸ்.. பெரிய டுபாக்கூரா இருப்பாரு போலியே

ஒரு காலத்தில் ஏ ஆர் முருகதாஸ் என்ற பெயரைக் கேட்டாலே மாஸாக இருக்கும். ஆனால் அவரை இப்போது தமாஷ் ஆக்கி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் கோலிவுட் வாசிகள். வேண்டாத பொண்டாட்டி கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதைப்போல முருகதாஸ் எதிர்பாராமல் செய்த தவறுக்கு கூட தற்போது வளைத்து வளைத்து அடித்து வருகின்றனர்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்குனர் என்பதையும் தரமான படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் செயல்படுத்தி வந்தார். ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிரபல நடிகரை வைத்து ஏ ஆர் முருகதாஸ் விரைவில் படம் தயாரிக்கிறேன் என கூறிவிட்டு சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த படம் டிராப் ஆனதை பிரபல நடிகர் கூறியது ஏ ஆர் முருகதாஸ் வேண்டுமென்றே செய்துவிட்டார் என்பதை போல ஜோடித்து விட்டார்கள் நம் நெட்டிசன்கள்.

தாண்டவம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஜிவி பிரகாஷின் புகைப்படத்தை பார்த்துவிட்டு ஏ ஆர் முருகதாஸ், ஜிவி பிரகாஷ் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரையும் வைத்து மியூசிக்கல் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை தயாரிக்க வாக்கு கொடுத்தாராம்.

ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் டிராப் ஆக அதன்பிறகு டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் தனது பணியைத் தொடர்ந்து வருகிறார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top