Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்-தை கழட்டிவிட்ட நிறுவனம்! வச்சி செய்யும் தல ரசிகர்கள்-(வீடியோ)
சர்கார் படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது அந்த பிறந்தநாளை சர்க்கார் படக்குழுவினருடன் நன்றாக கொண்டாடினார்கள். முருகதாஸ் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அவருக்காக ஒரு வீடியோ சன் நிறுவனம் பண்ணியுள்ளது. அதில்தான் தொடங்கியது பிரச்சினை.

ajith viswasam
அஜித்திற்கு தீனா முக்கியமான படமாக இருந்தாலும் இந்த படம் உருவாக காரணமாக இருந்தவர் அஜித். எஸ் ஜே சூர்யா வின் முயற்சியால் ஏஆர் முருகதாசுக்கு அஜித் கால்ஷீட் கொடுத்து படம் நடித்துக் கொடுத்தார் அந்தப் படம் அஜித்திற்கு நல்ல மாஸ் படமாக அமைந்தது, இருந்தாலும் இந்த வாய்ப்பை கொடுத்தவர் அஜித்.
அதன்பிறகு இவர்களது கூட்டணி ஷூட்டிங் வரை சென்று நின்று விட்டது என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை, ஆனால் அஜித் முருகதாஸ் இடையே மனஸ்தாபம் இருக்கிறது. அதன் பிறகு அஜீத் முருகதாஸை கண்டுகொள்வதே இல்லை, முருகதாஸும் அதேபோல் அஜித்தை கண்டு கொள்வதில்லை ஆனால் பல மேடைகளில் அஜித்திற்கு என்னிடம் கதை இருக்கிறது எனக் கூறி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய முருகதாஸ் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார், மேலும் இவரின் பிறந்தநாளுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ ஒன்றை உருவாக்கினார்கள் அதில் முருகதாஸின் அனைத்து படங்களும் வந்தன ஆனால் சன் நிறுவனம் வெளியிட்டிருக்கும் வீடியோவில் ஒரு பகுதியில் கூட அஜித் படம் இல்லை, தீனா படத்தின் பெயரை மட்டுமே ஒரு செகண்ட் அளவிற்கு வெளியிட்டார்கள் தவிர அஜித்தை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை இதற்கு முருகதாஸ் எதுவும் பண்ண முடியாது என்றாலும் சன் நிறுவனம் சர்கார் விளம்பரத்திற்காக இப்படி பண்ணி இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

ajith_murugadoss
ஆனாலும் அஜீத் ரசிகர்கள் மிகக் கோபமாக இருக்கிறார்கள் முருகதாஸ் மீது, முதலில் பட வாய்ப்பு கொடுத்தது தல அஜித் தான் அவரை எப்படி ஒதுக்குவதற்கு மனசு வந்தது என கேள்வி கேட்டு வருகிறார்கள் சமூகவளைதலத்தில்.
