Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-arm-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு துரோகம் செய்த முருகதாஸ்.. ஏழாம் அறிவுக்கு பிறகு ஒன்று சேராததற்கு இதுதான் காரணமாம்!

சூர்யாவின் சினிமா கரியரில் மிகவும் முக்கியமான திரைப்படங்களாக அமைந்தது கஜினி மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்கள்தான். இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ்.

சூர்யா சினிமா வரலாற்றில் வசூல் ரீதியாக அவரை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்ற படங்கள் என்றால் மிகையாகாது. ஆனால் அப்பேர்ப்பட்ட கூட்டணி அதன் பிறகு கிட்டத்தட்ட 9 வருடங்களாக ஒன்று சேராமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதற்கு முழுக்க முழுக்க காரணம் ஏ ஆர் முருகதாஸ் தானம். ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு விஜய்க்கு துப்பாக்கி எனும் படத்தை கொடுத்தார். அந்த படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு விஜய்க்கு கத்தி எனும் மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தார். அதே வருடம் சூர்யாவுக்கு அஞ்சான் என்ற மாபெரும் தோல்விப் படம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சூர்யா தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்ததால் அவர் மார்க்கெட்டில் சிறு சறுக்கல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் முருகதாஸ், சூர்யாவுக்கு ஒரு படம் கொடுத்து அவரது மார்க்கெட்டை மீட்டெடுக்க உதவி செய்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் விஜய்யின் மார்க்கெட் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைவதை கண்டு அவருடன் படம் செய்து சம்பாதிக்க வேண்டிய நோக்கத்தில் சூர்யாவை கைவிட்டு விட்டாராம்.

இருந்தாலும் சூர்யாவுக்கு கை கொடுக்க ஆளாயில்லை. வாடிவாசல், பாண்டிராஜ் படம் என தொடர்ந்து ஹிட் படங்களை கையில் வைத்திருக்கும் சூர்யா இதன்பிறகு முருகதாஸுடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

Continue Reading
To Top