Connect with us

Cinemapettai

என் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.

ar-murugadoss-rajini

Cinema News | சினிமா செய்திகள்

என் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.

ஏ. ஆர். முருகதாஸ்

தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தினை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸின் அடுத்த ப்ரொஜெக்ட் என்ன என்பதற்கு தான் கோலிவுட்டே வைட்டிங். எனினும் பொங்கலும் வந்துவிட்டது எந்த அறிவிப்பும் இல்லை என்பது தான் சூழல்.

விஜய் – முருகதாஸ் துப்பாக்கி அல்லது கத்தி பார்ட் 2 வில் இணையலாம் என்றனர். பின்னர் சன் பிக்ச்சர்ஸின் பேட்ட பொங்கலுக்கு வெளியானதும் ரஜனி – முருகதாஸ் பட அறிவிப்பு வரும் என்றும் தகவல் கசிந்தது.

keerthy suresh rajni

பின்னர் லைக்கா தான் தயாரிக்கின்றனர். இப்படம் முழு அரசியல் படம் எனவும் பேசப்பட்டது. இசைக்கு ஹாரிஸ் ஜெயராஜ், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ். படத்திற்கு நாற்காலி என டைட்டில் வைக்கலாம் என்று முருகதாஸ் யோசித்தார் அந்தப் பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்து வருகிறார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று தன ட்விட்டர் பக்கத்தில், “வதந்திகளை பரப்பாதீர், என அடுத்த பட தலைப்பு நாற்காலி இல்லை” என பதிவிட்டுள்ளார்.

சினிமாபேட்டை குசும்பு

சூப்பர் ஸ்டார் ஹீரோ இல்லை, ஹரிஷின் இசை கிடையாது, கீர்த்தி சுரேஷும் கிடையாது என எந்த மறுப்பும், இதில் இல்லையே. என்னவோ
நம்மால் முடிந்தது சும்மா கொளுத்தி போடுவோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top