முருகதாஸ் தமிழ் தெலுங்கு என இந்தியாவையும் தாண்டி பேசபடுபவர் இவர் தமிழ் திரைத்துறையில் மாபெரும் இயக்குனர் ஆவார் முருகதாஸ்  இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் ஹிட் என்றே சொல்லலாம். 

இவர் இயக்கத்தில் அடுத்த வாரம் ஸ்பைடர் படம் திரைக்கு வரவுள்ளது.இப்படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, மலையாளம், அரபிக் மொழிகளில் எல்லாம் டப் செய்யப்பட்டு ரிலிஸாகவுள்ளதாம்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டியில் ‘உங்கள் படங்களில் ஹீரோயின்கள் கஜினி தவிர மற்றதில் வெளும் கிளாமருக்காக மட்டும் தான் வருவது போல் உள்ளதே?’ என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘கண்டிப்பாக இதை நானே பல நாட்கள் யோசித்துள்ளேன், வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை, இனி என் படங்களில் எப்படியாவது கதாநாயகிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது போல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.