முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் வெயிட்டிங்.

அந்த வகையில் தற்போது இவர் மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகின்றார், இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.

மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது, தற்போது அனைவரின் எதிர்ப்பார்ப்பும் இப்படத்தின் டீஸர் எப்போது என்று தான்.

இப்படத்தின் டீஸர் இம்மாதம் 31-ம் தேதி வெளிவரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, இச்செய்தி மகேஷ்பாபு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

இப்படம் முடிந்து அடுத்து விஜய்யுடன் முருகதாஸ் ஹாட்ரிக் அடிக்க ரெடியாகி வருகின்றார் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது.