விஜய் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் விஜய் ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் ஏ.ஆர். முருகதாஸ்.

இவர்களின் மூன்றாவது கூட்டணிக்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். இவர்கள் மீண்டும் இணைகிறார்கள் என்ற தகவலை தவிர மற்ற விஷயங்கள் சரியாக வெளிவரவில்லை. ஆனால் சமீபத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்திருந்தது.

தற்போது இப்பட பட்ஜெட் ரூ. 125 கோடி என செய்திகள் வந்துள்ளது.

ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு படத் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் படத்தின் மூலம் மீண்டும் படங்கள் தயாரிக்க ஆரம்பிக்க இருக்கின்றனர்.