புதன்கிழமை, நவம்பர் 13, 2024

கோபிக்கு சப்போட்டாக வந்த மூர்த்தியின் அம்மா.. இனி தலைவன கையிலே பிடிக்க முடியாது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு தொடரும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வந்தது. அப்போது மூர்த்திக்கு கோபி ராதிகாவுடன் பழகியது தெரிய வந்தது.

இதனால் ராதிகாவிடம் நீங்கள் திருமணம் செய்யப் போகிறவர் நல்லவர் இல்லை என கூறினார். இதனால் குழப்பத்தில் இருந்த ராதிகா விடாப்பிடியாக கோபியின் குடும்பத்தை பார்க்கவேண்டும் என நச்சரித்தாள். உடனே கோபி குடித்து எல்லா உண்மையும் சொன்னதால் ராதிகா நிலைகுலைந்து போய் உள்ளார்.

தற்போது ராதிகா கோபி தனக்கு வேண்டாம், பாக்யாவின் குடும்பத்திற்கு தன்னால் துரோகம் செய்ய முடியாது என்ற யோசனையில் உள்ளார். இந்நிலையில் ராதிகாவின் அம்மா மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். அப்போது நடந்த விஷயத்தை எல்லாம் ராதிகா சொல்லி அவரது அம்மாவிடம் அழுகிறார்.

ஆனால் ராதிகா அம்மா, உன்னுடைய வாழ்க்கையை பாரு, மயூவ கஷ்டப் படுத்தாத நீ அந்த கோபியை கல்யாணம் பண்ணிக்கோ என ராதிகாவை வற்புறுத்துகிறார். ஆனால் ராதிகா தற்போது அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் செல்கிறார். இதனால் ராதிகா கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி வில்லியாக மாற வாய்ப்புள்ளது.

மேலும் எவ்வளவோ கஷ்டப்படுத்தி மூர்த்தி பாக்யாவின் வாழ்க்கையை காப்பாற்றினாலும், தற்போது மூர்த்தியின் அம்மா பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்து பாக்யாவின் வாழ்க்கையைக் கேடுக்கப் போகிறார்.

ராதிகா மட்டும் கோபிய கல்யாண செய்ய ஒத்துக்கிட்டா நம்ம தலைவன் கோபிய கைல பிடிக்க முடியாது. மேலும் கோபியே ராதிகாவை விட்டு போகனும் நெனச்சாலும் அது நடக்காது போல. இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News