Connect with us

Cinemapettai

பெண்களை கொலை செய்து பிணத்துடன் ஜாலியாக இருப்பேன்: கொலையாளி ஆனந்தன் பகீர்

chennai-lady-murdered

Tamil Nadu | தமிழ் நாடு

பெண்களை கொலை செய்து பிணத்துடன் ஜாலியாக இருப்பேன்: கொலையாளி ஆனந்தன் பகீர்

அரக்கோணம்: பெண்களை கொலை செய்து நகைகளை திருடி கொண்டு அந்த பிணத்துடன் உல்லாசமாக இருப்பேன் என சைகோ கொலையாளி ஆனந்தன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி பகுதியை சேர்ந்தவர் சரோஜம்மாள். இவருக்கு வயது 65. சில மாதங்களுக்கு முன்பு இவரை யாரோ அம்மிக்கல்லை போட்டு கொன்று விட்டனர் . இந்த வழக்கில் நகரி போலீசார் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை கைது செய்து விசாரணையை நடத்தினர். அப்போது ஆனந்தன் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளான்,

அரக்கோணத்தில் ஒரு பெண்ணின் தலை மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பிறகு அந்த பெண்ணின் சடலத்துடனேயே உல்லாசமாகவும் இருந்துள்ளார். அதன்பிறகு பெண் அணிந்திருந்த நகைகளையும் திருடி சென்றிருக்கிறார். இப்போது சரோஜம்மாவும் இதேபோலதான் கொல்லப்பட்டுள்ளார்.

போலீசாரிடம் ஆனந்தன் கூறுகையில்: எனக்கும் இந்திராணி என்ற பெண்ணுக்கும் உறவு இருந்தது. இதில் இந்திராணி ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். அவருக்கு நிர்மலா என்ற தோழியுடன் தகராறு இருந்தது. இதனால் நிர்மலாவை கொல்ல வேண்டும் என்று இந்திராணி என்னிடம் சொல்லி கொண்டே இருப்பார். அதனால் அரக்கோணத்தில் டெய்லராக உள்ள நிர்மலா வீட்டுக்கு நான் போனேன். அங்கு தன்னுடைய அம்மாவுடன் நிர்மலா தூங்கி கொண்டிருந்தார். அம்மாவை சரமாரியாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துவிட்டார்.

ஒரு அறைக்குள் அவரை இழுத்து சென்று பூட்டிவிட்டேன். பிறகு நிர்மலாவை அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்தேன். பிறகு பிணத்துடன் ஜாலியாக இருந்தேன்.. நகைகளை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டேன். இப்படித்தான் சரோஜம்மாளையும் கொன்று உல்லாசமாக இருந்தேன் என்றார். . பெண்களை கொலையும் செய்து விட்டு பிணத்துடன் உல்லாசம் அனுபவித்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top