பாபநாசம் படத்தில் கமல் ஒரு கொலையை மறைப்பதற்காக அந்த பிணத்தை புதைத்து வைத்து, சம்பவம் நடந்த போது தான் ஊரிலேயே இல்லையென்றும், கொலை பற்றி ஏதும் தெரியாதது போலவும் நடித்திருப்பார். அதே போன்ற சம்பவம் தற்போது உண்மையாக நடந்துள்ளது.

சினிமா பைனான்சியரான ஜோதி என்பவரை சில நாட்களாக காணவில்லை என்று அவரது மருமகன் செல்வன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

காணாமல் போன நாள் அன்று தான் ஊரிலேயே இல்லை என்றும் அவர் சொல்லிக்கொண்டு வந்துள்ளார். விசாரணையின் போது செல்வன் ஊரிலில்லை என்று அளித்திருந்த சாட்சியங்கள் பொய் என்று விசாரணையில் தெரிந்துள்ளது.

அதிகம் படித்தவை:  கமலின் அரசியல் அறிவிப்பு வருதோ இல்லையோ ஆனா அதிரடி அறிவிப்பு.! கமலின் விஸ்வரூபம்-2.!

அதன் பிறகு காவல் துறை அவர்கள் பாணியில் விசாரித்து செல்வனை வழிக்கு கொண்டு வந்துள்ளனர். விசாரணையில் செல்வன் தான் கோவத்தில் மாமியார் ஜோதியை நெஞ்சில் குத்தியதாகவும் அந்த அதிர்ச்சியில் அவர் மரணமடைந்ததாகவும் சொல்லியுள்ளார். பிணத்தை அங்கு புதைத்தேன், இங்கு புதைத்தேன் என்று காவல் துறையை அலைக்கழித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  அவர் என்னிடம் வேலை கேட்டு வரவில்லை : சுருதிஹாசன்!!

கடைசியில் கிடிக்கி பிடி போட்டு உண்மையாக பிணத்தை புதைத்த இடத்தை காவல் துறை கண்டறிந்துள்ளனர். பிரேத பரிசோதனையில் இது தற்செயலாக நடந்த கொலை அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செல்வன் மற்றும் கொலையில் தொடர்புள்ள அவரது நண்பர்களையும் கைது செய்துள்ளது காவல் துறை.

பாபநாசம் படத்தினை பார்த்துதான் கொலையை இப்படி மறைக்கலாம் என்று தனக்கு தோன்றியதாக செல்வன் கூறியுள்ளாராம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அடப்பாவிகளா?