fbpx
Connect with us

Cinemapettai

சென்னையில் பயங்கரம்.! துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் சடலம்.! பரபரப்பில் கோடம்பாக்கம்

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னையில் பயங்கரம்.! துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் சடலம்.! பரபரப்பில் கோடம்பாக்கம்

சென்னை குப்பை கிடங்கில் கைகள் தனித்தனியாகவும் கால்கள் தனித்தனியாகவும் கனகச்சிதமாக பார்சல் செய்து வீசப்பட்ட இளம் பெண்ணின் உடலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார் மாநகராட்சி ஊழியர்கள். பெருங்குடியில் மிகப்பெரிய குப்பை கிடங்கு இருக்கிறது சென்னையில் இருக்கும் ஒட்டுமொத்த குப்பையில் கொட்டப்படும் இப்படி கொட்டப்பட்ட குப்பையில் தான் வித்தியாசமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த குப்பை கோடம்பாக்கத்திலிருந்து கொண்டுவரப்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.

அந்த பார்சலை  மாநகர ஊழியர்கள்  பார்த்த பொழுது அதில் கை, கால்கள்  என அனைத்தும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு   பார்சல் செய்து வீசப்பட்டுள்ளது இந்த பார்சலில் உடல் பகுதி மட்டும் காணவில்லை இது ஒரு பெண்ணின் சடலம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனே பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்கள்.

இந்த தகவலை அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள் கொலை செய்யப்பட்ட பெண் கோடம்பாக்கத்தை சேர்ந்தவரா அல்லது வேற பகுதியை சேர்ந்தவர் என்ற தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது கொலை செய்யப்பட்ட பெண் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணாக இருக்கும் என தெரிகிறது அது மட்டுமில்லாமல் அவரது கையில் இரண்டு பச்சை  குத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யபட்டிருக்கலாம் என சந்தேக படுகிறார்கள் போலீசார்கள், அதுமட்டும் இல்லாமல் இதன் உடல் பகுதியை தீவிரமாக தேடி வருகிறாகள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top