ரஜினிகாந்துடன் தப்பு தாளங்கள், முரட்டுக்காளை ஆகிய படங்களில் நடித்தவர் சாந்தாராம். உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். முரட்டுக்காளை படத்தில் பண்ணையார் ஜெய்சங்கரின் அடியாளாக நடித்திருப்பார் சாந்தாராம்.

பண்ணையாரைப் பகைத்துக் கொள்பவர்களை மாட்டுக் கொம்பால் குத்திக் கொல்லும் கேரக்டரில் அவர் வருவார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மருத்துவமனையிலேயே அவர் மரணம் அடைந்தார். சாந்தாராம் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

30-1464590986-santharam-murattukalai-villain