Sports | விளையாட்டு
விஜய் சேதுபதியின் 800 பட சர்ச்சையை விடுங்க.! அந்த 800வது விக்கெட் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை படைத்தவர்.
இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இவர் சாதனையை நெருங்கியது கூட இல்லை.
1992 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராகவே தனது ஓய்வு முடிவை அறிவித்தார்
800 என்ற தலைப்பில் படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டார் . பின்னர் சர்ச்சையாகி கைவிடப்பட்டது .
2010ஆம் ஆண்டில் இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி கொண்டிருந்தது. அப்போது இந்திய அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாட இருந்த முத்தையா முரளிதரன் அதே டெஸ்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் .
அதே டெஸ்ட் போட்டியில் தனது 800 ஆவது விக்கெட் ஆக பிரக்யான் ஓஜா விக்கெட்டை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்தார்.

ohja
