Connect with us

Cinemapettai

ஹீரோவாக முனீஷ்காந்த்! தலைப்புடன் வெளியான வித்யாசமான போஸ்டர் இதோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹீரோவாக முனீஷ்காந்த்! தலைப்புடன் வெளியான வித்யாசமான போஸ்டர் இதோ

ராமதாஸ் என்பதை விட முனீஷ்காந்த் என்றால் தான் அனைவருக்கும் தெரியும். சினிமா ஆசையில் சென்னை வந்து இவர் இன்று காமெடியன் வேடத்தில் நடித்து வருபவர் . ராமதாஸ் முக்கிய ரோலில் நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

‘டோரா’ திரைப்படத்தின் இயக்குநர் தாஸ் ராமசாமியின் கௌஷ்துப் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து ‘மிடில் கிளாஸ்’ என்கிற இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.

muneeskanth

எதார்த்தமான, நகைச்சுவை கலந்த, கலகலப்பான குடும்பப் படமாக இது அமையுமாம். களவாணி’ படத்தில் உதவி இயக்குநராகவும், ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘பூமிகா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றிய கிஷோர் எம்.ராமலிங்கம் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

தீபாவளி முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்குமாம். ‘கலக்கப் போவது யாரு’ ராமரும் முக்கியக் கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளாராம்.

muneeskanth in middle class

சந்தோஷ் தயாநிதி இசை, ஆர்வி ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் ஆனந்த ஜெரால்டின்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top