Tamil Cinema News | சினிமா செய்திகள்
உங்களுக்கு பயம் இருந்தா பார்க்காதீர்கள்-மம்மி ட்ரைலர்
Published on

பிரியங்கா திரிவேதி
பெங்காலி படத்தில் அறிமுகம் ஆனாலும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று பல மொழிகளில் கலக்கியவர். பின்னர் கன்னட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான உபேந்திரா வை திருமணம் செய்து கொண்டு பிரியங்கா உபேந்திராவாக மாறினார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
பிரியங்கா நடிப்பில் லோஹித் இயக்கத்தில் சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹாரர் படம் மம்மி (கன்னடம்), சின்னாரி (தெலுங்கு). ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார் இப்படம் ஆகஸ்ட் 3 ரிலீசாகிறது.
