Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மும்தாஜ் இங்குதான் சாக விரும்புகிறார்.. வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகை மும்தாஜ் தன் சொந்த மாநிலமான மும்பையில் இல்லாமல் தமிழகத்தில் தான் இறக்க வேண்டும் என ஆசைப்படுவதாக அவரது அண்ணன் தெரிவித்து இருக்கிறார். பிக்பாஸின் முதல் சீசன் கொடுத்த ஆர்வம் அடுத்த சீசன் எப்போது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது. பல நாள் காத்திருப்புக்கு இந்த மாதம் 17ந் தேதி விடை கிடைத்தது. அதிலும் கமல்ஹாசனே தொகுப்பாளராக களமிறங்குவதால், பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என ரசிகர்கள் கருதினர். யாஷிகா ஆனந்த், தாடி பாலாஜி, ஜனனி ஐயர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதிலும், கவர்ச்சி நடிகையாக கொடி கட்ட பறந்த மும்தாஜ் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஏற்கனவே பிரபல நாயகி என்பதால் அவர் மீது இன்னும் கிரேஸ் குறையாமல் இருப்பது தெளிவாக புரிந்தது. ஆனால், வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளே கறார் பார்ட்டியாக உலாவுவதால் சமூக வலைத்தள மீம்களில் சிக்கினார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் தன் தங்கை மும்தாஜ் தமிழக மண்ணில் தன் கடைசி மூச்சை விட விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது, அவரை பிக்பாஸ் வீட்டில் காயத்ரி என சிலர் கலாய்க்கின்றனர். ஆனால், அவர் எப்போதுமே மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் அவரை பற்றி தெரியும். மும்தாஜ் கொஞ்சம் வித்தியாசமான கேரக்டர். அவங்க வேலைகளை தானே செய்து கொள்வது தான் அவரது பழக்கம். நாம உதவி பண்றோம்னு சொல்லிக்கிட்டு ஏதாவது செஞ்சா, கோபம் வந்துடும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க விழா ரெட் கார்பெட்ல மும்தாஜ் கூட கை கோர்த்து நான் தான் நடந்து சென்றேன். ஆனால் அதையே சிலர் தவறாக புரிந்து கொண்டார்கள். இது மேல்நாட்டு நடைமுறை. ஒரு பெண் ரெட் கார்பெட்ல நடந்து வரும்போது, சகோதரரோ, அப்பாவோ, சேர்ந்து வருவாங்க. அப்படித்தான் என் தங்கையோடு நானும் நடந்துபோனேன். தமிழ் மக்கள் மீதான அன்பினால் தான் இந்த பிக்பாஸ் எண்ட்ரி. எப்போதும் தமிழ் ரசிகர்களை நினைச்சு மும்தாஜ் ரொம்பப் பெருமைப்படுவாங்க எனத் தெரிவித்து இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top